full screen background image

கமல்ஹாசன் வெளியிட்ட ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படத்தின் போஸ்டர்

கமல்ஹாசன் வெளியிட்ட ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படத்தின் போஸ்டர்

Octo spider production  சார்பில்  எஸ்.துரை, எஸ்.சண்முகம் ஆகியோர் தயாரித்திருக்கும் புதிய படம் ‘பயம் ஒரு பயணம்’.

‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் ஹீரோவாகவும், நடிகை விசாகா  சிங் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் மேலும், மீனாட்சி தீட்சித், ஜான் விஜய், ஊர்வசி, ஞானவேல், ராமதாஸ், சிங்கம் புலி, யோகி பாபு, லொள்ளு சபா மனோகர், கிங்காங், மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஐ.ஆண்ட்ரூ, இசை – ஒய்.ஆர்.பிரசாத், படத் தொகுப்பு – எல்.வி.கே.தாஸ் டேனியல், கலை – எம்.ஆர். கார்த்திக் ராஜ்குமார், நடனம் – சங்கர் ஐயா, சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம், பாடல்கள் – மோகன்ராஜ், மணி அமுதவன், பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு – எஸ்.துரை, எஸ்.சண்முகம், எழுத்து-இயக்கம் – மணிஷர்மா.

புதிய இயக்குநரான மணிஷர்மாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் போஸ்டரை பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் இன்று வெளயிட்டார். 

திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று, ஊக்கப்படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக  உச்சரிக்கும் டாக்டர் கமல்ஹாசன், ‘பயம் ஒரு பயணம்’ படக் குழுவினரை பெரிதும் பாராட்டினார்.

DSC_9002 (1)

அவர் பேசும்போது,  “டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர். ஆனாலும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது. ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் அவர்   என்னுடன் இணைந்து நடித்து இருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார். இப்போது அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் சில காட்சிகளை  காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப்படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ‘பயம் ஒரு பயணம்’  படக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…” என்று பாராட்டி பேசினார்.

Our Score