full screen background image

ஒரு டாக்டர் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ஆறாம் அறிவு’

ஒரு டாக்டர் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ஆறாம் அறிவு’

சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் டாக்டர் பரத் விஜய் தயாரிக்கும் புதிய படம் ‘ஆறாம் அறிவு’. இதில் அவரே ஹீரோவாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் இருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக புதுமுகம் சஹானா நடிக்கிறார். மேலும் ஆர்.சி.சுந்தர், சுரேகா, தீபன், லாலித்யா, வினோத், ரவிமன்யம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கார்த்திகேயன், கணேஷ், இசை – ஷியாம் எல்.ராஜ், பாடல்கள் – அம்புரோஸ், பின்னணி இசை – பிரியதர்ஷன், நடனம் – ரமேஷ்.

சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் 65 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளனர்.

ஒரு மருத்துவராக இருக்கும் நிலையில் சினிமா துறைக்குள் நுழைந்தது பற்றியும், படம் பற்றியும் விரிவாகப் பேசிய டாக்டர் பரத் விஜய், “என்னோட தொழில் மருத்துவம்தான் என்றாலும் சின்ன வயதில் இருந்தே சினிமா மீது எனக்கு ஒரு காதல் இருந்த்து. அதே சமயம் என்னுடைய உறவுக்காரர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் நிறைய பேர் மருத்துவர்களாக இருந்த்தால் மருத்துவம் மீது எனக்கு ஒரு ஈர்ப்பும் இருந்த்து.

இதனால் முதலில் மருத்துவரானேன். பின்பு மாடலிங் செய்ய ஆரம்பித்தேன். பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்தேன். இந்தக் காலக்கட்டத்தில் படப்பிடிப்பு அனுபவங்கள் நிறைய கிடைத்தன. இதனை வைத்து திரைத்துறையில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன். கூடவே படம் இயக்கும் ஆர்வமும் எனக்குள் இருந்தது. இதனால் முதலில் பிலிம் டைரக்ஷன் கோர்ஸை முடித்தேன். பின்புதான் களத்தில் குதித்தேன்.

இந்தப் படத்தின் கதை என்னவென்று பார்த்தால், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நண்பர்களின் உதவியுடன் வாழ்க்கையில் ஒன்று சேர்கிறார்கள் காதலர்கள். அவர்களது வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசுகிறது. அவர்களது குடும்ப நண்பன் ஒருவர் இறந்து போகிறார். இதன் பின்பு அந்த மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது. யாரை பார்த்தாலும் கொடூரமாக நடந்து கொள்கிறாள். மூர்க்கத்தனமாகத் தாக்குகிறாள். இதனால் கணவன் மன நிம்மதியில்லாமல் தவிக்கிறான். அவளை எந்த சக்தி ஆட்டிப் படைக்கிறது என்பது குறித்து ஆராய்கிறான். அவனுக்கு விடை கிடைத்ததா இல்லையா என்பதை சுவையான திரைக்கதையில் சொல்கிறோம்.

“உனக்காக வாழ்வது சுய அறிவு. ஊருக்காக வாழ்வது பொது அறிவு

இதில் உண்டோ நமக்கு பகுத்தறிவு. இதை பகுத்தந்திடு. அதுதான் ஆறாம் அறிவு..”

என்ற பாடல் படத்தில் மிக விசேஷமானது.

இந்தப் பாடலை மலேசியாவில் உள்ள அவுட்லா ட்ரூப் பாடகர்களுடன் இணைந்து மரண கானா விஜி, ப்ரின்ஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் வெஸ்டர்ன், ராப், கிளாஸிக்கல் என்று மூன்று வகைகளிலும் இடம் பெற்றுள்ளது..” என்றார்.

Our Score