full screen background image

துபாயில் ரசிகர்களைச் சந்தித்து உரையாடிய நடிகர் கமல்ஹாசன்..!

துபாயில் ரசிகர்களைச் சந்தித்து உரையாடிய நடிகர் கமல்ஹாசன்..!

திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’ திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் துபாயில் நடித்தியுள்ளனர்.

இதற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட படக் குழுவினர் கடந்த 30-ம் தேதியே துபாய் சென்றனர். அங்கே ரசிகர்களிடையே தோன்றி ‘உத்தமவில்லன்’ படம் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

துபாயில் இருக்கும் புகழ் பெற்ற ‘கோல்டன் சினிமாஸ்’ தியேட்டரில் உலக நாயகன் கமலஹாசன், ஜெயராம், நாசர், ஆண்ட்ரியா, பூஜாகுமார், ரமேஷ் அரவிந்த், ஜிப்ரான் உட்பட படக் குழுவினர் அனைவரும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர்.

தங்களின் அபிமான நடிகருடன் அமர்ந்து அவரது படத்தைப் பார்த்தது, துபாய் மக்களுக்கு ‘கோடை வெப்பத்தை’ தகர்க்கும்விதமாக அமைந்திருந்தது. மகிழ்ச்சியில் திளைத்தனர்.

DSC_0255

மேலும் துபாயில் இருக்கும் தமிழ் எப்.எம். ரேடியோ நடத்திய ‘உத்தமவில்லன்’ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் உலக நாயகனுடன் அளவலாவியப்படியே  உணவருந்தும் வாய்ப்பையும் பெற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.

‘உத்தம வில்லன்’ படக் குழுவினரைச் சந்தித்தது,  தங்கள் சொந்த பந்தங்களைப் பார்த்தது போல் இருந்ததாக மகிழ்ச்சியுடன் கூறினர் அமீரகத்து தமிழ் மக்கள். 

Our Score