full screen background image

துபாய்வாழ் தமிழர்கள் நிகழ்த்திய உலக சாதனை..!

துபாய்வாழ் தமிழர்கள் நிகழ்த்திய உலக சாதனை..!

உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நம் கலாச்சாரத்தையும், கலைகளையும் பல்வேறு வகையில் வளர்ப்பதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதில் மிக முக்கியமானது இசை. அதிலும் நம் தமிழ்த்திரை இசையை உலக அரங்கில் எடுத்துச் செல்வதற்கு, அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் முக்கிய பங்கு வகிப்பதோடு, கலையோடும், இசையோடும்  தங்களது வாழ்வை இணைத்துக் கொண்டு கடல் கடந்து வாழ்ந்தாலும் எப்போதும் நம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

அந்த வகையில், துபாயில் வாழும் தமிழர்கள் ஒன்றினைந்து தமிழ்த்திரை இசைப் பாடல்கள் மூலம் பிரமிக்க வைக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, ஆசியா அளவிலான புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். 

இந்த நிகழ்வில் இசையில் ஆர்வம் கொண்ட துபாய் வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 24 மணி நேரம் ‘நான் ஸ்டாப்’பாக திரையிசைப் பாடல்களை பாடி ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம் பெற்று உலக சாதனையை படைத்துள்ளனர்.

இந்த புதிய சாதனை குறித்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் மதிப்பீட்டாளர் விவேக் கூறுகையில், ”இதற்கு முன்பு இதேபோன்று 13.5 மணி நேரம் தொடர்ந்து பாடல்கள் பாடியதுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது இவர்கள் முறியடித்துள்ளனர்.” என்றார்.

 

Dubai Tamilians

 

இந்த சாதனை நிகழ்ச்சியின் பெருமைமிகு பார்வையாளராக, இதில் பங்கேற்கும் இசைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி கௌரவிக்கும்விதமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனா பங்கேற்க, அவரது முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மேலும் நடிகை கோமல் சர்மா, பத்திரிக்கை தொடர்பாளர் ஏ.ஜான் ஆகியோரும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பகவதி ரவி, ஸ்ரீபட், ஆர்.ஜே.ருபீனா சுபாஷ் ஆகியோர் இந்த நிகழ்வை அழகாக ஒருங்கிணைத்தனர். 

பகவதி ரவி, தியாகு, பாலாஜி, ராகேஷ், அஜய், விக்னேஸ்வரன், ஜெகநாதன், பத்மினி, வள்ளி ரவி, மிருதுளா பாலகிருஷ்ணன், சரண்யா, ஜனனி, ஜெய்ஸி மஜோலி, சரண்யா உள்ளிட்ட 15 பாடகர்கள் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி ரசிகர்களைப் உற்சாகப்படுத்தினார்கள்.

Our Score