full screen background image

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன்..!

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன்..!

உலக அளவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவிக்களில் முதன்மையானது கேன்ஸ் திரைப்பட விழா.. சர்வதேச திரைப்படங்களின் விற்பனைக்கும், பகிர்தலுக்கும் மிகப் பெரிய வர்த்தக மையமாகவும் இந்தப் பட விழா இருந்து வருகிறது..

பிரான்சு நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் மே மாதம், இந்த விழா நடைபெறும். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தயாரான சிறந்த திரைப்படங்கள் அங்கு திரையிடப்படும். போட்டி பிரிவு, போட்டியில்லாத பிரிவு, மரியாதை நிமித்தமான பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளில் ஆயிரக்கணக்கான படங்கள் திரையிடப்படுகின்றன.

அதில், கலை–அழகியல் நிறைந்த சிறந்த படங்களுக்கான போட்டியும் நடைபெறும். சிறந்த படத்துடன், சிறந்த நடிகர்–நடிகை, மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும். உலக அளவில் மிகஉயர்ந்த விருதுகளாக இந்த விருது கருதப்படுகிறது. பல நாடுகளில் உள்ள தேர்வாளர்கள் விருதுக்குரிய படங்களையும், சிறந்த நடிகர்–நடிகைகளையும் தேர்ந்தெடுப்பார்கள்.

உலக அளவில் படைப்பாளிகள் மற்றும் நடிகர்–நடிகைகளின் எதிர்பார்ப்புக்குரிய ‘கேன்ஸ்’ படவிழா, நாளை (புதன்கிழமை) ‘கேன்ஸ்’ நகரில் தொடங்குகிறது. இம்மாதம் 25–ந்தேதி வரை விழா நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் இருந்து ‘டிட்லி’ (இந்தி) என்ற ஒரே ஒரு படம் மட்டும் ‘கேன்ஸ்’ படவிழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. மரியாதை நிமித்தமான பிரிவில் திரையிடப்பட உள்ள இந்த படத்தை கானு பெல் டைரக்டு செய்து இருக்கிறார். யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, பட அதிபர் விஸ்வாஸ் சுந்தர் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

Our Score