full screen background image

நன்றி மறவாமல் கால்ஷீட் கொடுத்த நடிகர் ஜீவா..!

நன்றி மறவாமல் கால்ஷீட் கொடுத்த நடிகர் ஜீவா..!

“திரையுலகில் தங்களது வித்தியாசமான படங்களின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது RS Infotainment தயாரிப்பு நிறுவனம். மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் படங்களையே தேர்ந்தேடுத்து தயாரிப்பதே எண்ணமாய் கொண்டுள்ளனர் என்பதை ‘யாமிருக்க பயமே’ படத்தின் பிரம்மாண்ட  வெற்றி நிரூபித்தது.

‘யாமிருக்க பயமே’ வெற்றியை தொடர்ந்து  இயக்குநர் டி.கே. இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தைத் தயாரிக்கிறது RS Infotainment.

kavalai vendaam-poster

“மீண்டும் டிகே-RS Infotainment கூட்டணி இணைகிறோம், அதற்கு ‘கவலை வேண்டாம்’ என்பதைக் காட்டிலும் ஒரு தலைப்பு கச்சிதமாய் இருக்குமோ..?” என்று தயாரிப்பு நிறுவனத்தார் கூறுகின்றனர்.

jeeva-bobby simha

‘ஜீவாவின் நடிப்பு, டிகே-வின் இயக்கத் திறமை மற்றும்  சிறப்பு கௌரவ தோற்றத்தில் வரும் பாபி சிம்ஹாவின் அட்டகாசமான நடிப்பு என ஒரே  உற்சாக குவியலாக இருக்கப் போகிறது இந்த ‘கவலை வேண்டாம்’ திரைப்படம்.

நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகவுள்ள  ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது…”

இப்படி இந்தப் பட நிறுவனத்தார் வெளியிட்ட அறிக்கை சொன்னாலும், உண்மையில் ஒரு விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை.

இந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த ‘யான்’ என்ற படம் மிகப் பெரிய தோல்வியை சம்பாதித்து, இந்த நிறுவனத்திற்கு மிகப் பெரிய அளவுக்கான நஷ்டத்தை சம்பாதித்திருக்கிறது.

yaan-poster-1

படம் ரிலீஸான பின்பே இந்த ‘யான்’ படம் ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என்பதே தயாரிப்பாளர்களுக்கு தெரிய வந்தது.  அதன் பின்பு இயக்குநர் ரவி.கே.சந்திரனையே தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்தப் படத்தின் துவக்கத்தில் ரவி கே.சந்திரன் ஜீவாவிடம் இந்தக் கதையைக் கூற.. ஜீவாதான் இந்த்த் தயாரிப்பாளர்களிடத்தில் ரவி.கே.சந்திரனை அறிமுகப்படுத்தி வைத்து ‘தான் இதில் நடிக்க விரும்புவதால் நீங்களே தயாரியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

அப்படி தான் முன் நின்று ஏற்பாடு செய்த ஒரு பிராஜெக்ட் மிகப் பெரிய தோல்வியையும், நஷ்டத்தையும் சம்பாதித்துக் கொடுத்திருப்பதால் அதே தயாரிப்பாளர்களை கரையேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு தனக்குண்டு என்கிற நல்லெண்ணத்தில் நடிகர் ஜீவா இதே நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

பாராட்டுக்குரிய விஷயம்.. இந்த ‘நன்றி’ என்கிற வார்த்தையை அதிகமாக திரையுலகில் பார்க்கவே முடியாது. எப்போதாவது அத்திப்பூத்தாற்போல பார்க்க வேண்டியிருக்கிறது. இம்முறை நடிகர் ஜீவாவின் புண்ணியத்தில் பார்த்துவிட்டோம்.

நன்றி ஜீவா ஸார்..!

Title                         – KAVALAI VENDAM / கவலை வேண்டாம்

Hero                         – JIIVA  / ஜீவா

Special Appearance – Bobby Simha / பாபி சிம்ஹா

Director                   – DEEKAY / டிகே

Music                      – S.N PRASAD / பிரசாத் 

DOP                        – MUKESH / முகேஷ் 

Art                           – SENTHIL / செந்தில் 

Editor                       – RUBEN / ரூபன் 

Choreographer         –  BRINDA & VIJI / பிருந்தா, விஜி 

Production               – RS INFOTAINMENT PVT LTD 

Our Score