full screen background image

‘என் வழி தனி வழி’ படத்திற்கு தியேட்டர் கட்டணத்தில் சலுகை..!

‘என் வழி தனி வழி’ படத்திற்கு தியேட்டர் கட்டணத்தில் சலுகை..!

புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் ‘எல்லாம் அவன் செயல்’ என்று இருப்போர் ஒரு ரகம். தனக்கென தனிப் பாதை ஒன்று உருவாக்கி ‘என் வழி தனி வழி’ என்று பயணிப்போர் இன்னொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் நடிகர் ஆர்கே.

திரையுலகில் விடாமுயற்சியால் தனக்கான ஓர் இடத்தைத் தேடிப் பிடித்து அடைந்திருப்பவர். எதிலும் தனித்து வெளிப்பட விரும்புகிற அவர்,  வியாபாரம் தொடர்பாகவும், சுய முன்னேற்றம் சார்ந்தும் தன்னம்பிக்கை கருத்துக்களை பல்வேறு கூட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர் .

தனது ‘வாங்க சாப்பிடலாம்’ ஓட்டலில் சினிமா தொடர்பானவர்கள் சங்க உறுப்பினர் கார்டுடன் சாப்பிட வருகிறவர்களுக்கு  உணவு விலையில் 10 சதவிகித சலுகை வழங்கினார். 

அண்மையில் தன் ‘என்வழி தனி வழி’ படத்தின் ட்ரெய்லரை வெளியிடும்போதுகூட ஒரு புதுமை செய்தார். பட விளம்பரம் வந்த செய்தித்தாளில் அந்த விளம்பரத்தின் மீது மொபைல் போனைக் காட்டி  க்ளிக் செய்தால்போதும். படத்தின்  ட்ரெய்லர் தெரியும். இது இந்தியாவில் முதல் முயற்சி என்று பேசப்பட்டது ; பாராட்டப்பட்டது.

இப்போது ‘என் வழி தனி வழி’ படம் வெளியாகியுள்ளது. இதற்காக ஒரு சலுகைக் கூப்பனை வெளியிட்டு இப்போதும் ஒரு புதுமையைச் செய்திருக்கிறார் ஆர்.கே. இந்தக் கூப்பன்கள் படம் வெளியாகியுள்ள எல்லா திரையரங்குகளின் வாசலிலும் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த ரசிகர் மன்ற கூப்பன்களுடன் டிக்கெட் வாங்கினால் திரையரங்கில் படத்துக்கான கட்டணத்தில் 10 சதவிகிதத்தைக் குறைத்துக் கொள்வார்களாம். அதாவது டிக்கெட்100 ரூபாய் என்றால் 90 ரூபாய் போதுமாம்.

ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியருக்கிறது..? 

Our Score