ஆசிய திரைப்படங்களுக்காக வருடந்தோறும் நடத்தப்படும் ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022 விருதுகளில் நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளதுது.
இந்த விழாவில் ஆசிய கண்டத்தை சேர்ந்த பதினாறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிப் படங்கள் கலந்து கொண்டன.
சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குரு சோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருது ‘மின்னல் முரளி’ என்ற மலையாளப் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் இந்த விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது.
ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத் துறையை சார்ந்தவர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.