‘ஓங்காரம்’ படத்தின் இசை வெளியீட்டின்போது நடிகர் ‘கஞ்சா’ கருப்பு அந்தப் படத்தின் ஹீரோயினை ஆபாசமாகத் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ‘கஞ்சா’ கருப்பு பேசும்போது, “ஒரு நாள் தயாரிப்பாளராக இருந்து பாருங்கள், அப்போதுதான் தெரியும் அதன் கஷ்டம். நான் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து எல்லா பணத்தையும் இழந்துவிட்டு ஊருக்குப் போய் என் அம்மாவை பார்த்தேன். அப்போது அவர் சொன்னார், மகனே.. நீ காசு கொடுத்து படிக்காத படிப்பை, சினிமாவில் காசை கொடுத்து படிச்சிருக்க. நல்ல அனுபவமா எடுத்துக்க.” என்றார்.
இப்போது ராஜராஜ சோழன் இந்துவா முஸ்லிமா என்று சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்கள். எதுக்கு இதெல்லாம்..? படத்தை எடுத்தோமா, சம்பாரித்தோமா.. வீடு, வாசல் வாங்குனோமா என்று இருப்பதை விட்டுவிட்டு இதெல்லாம் தேவை இல்லாத விஷயம்.
வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தும் இயக்குநர், நடிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நம்ம ஊரில் இருக்கும் ஊர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? அவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் கட்டினால் நம்ம பிள்ளைகளுக்கு இலவசமாக விடுவார்களா? அதனால் அயல்நாட்டில் பணத்தைப் போடாதீர்கள்” என்றார் ‘கஞ்சா’ கருப்பு.
தொடர்ந்து பேசிய நடிகர் ‘கஞ்சா’ கருப்பு, படத்தில் நடித்த நாயகி, இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டதற்காக, அவரை ஆபாசமாகத் திட்டிவிட்டுப் போனார்.