விஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்

விஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘ஆக்சன்’ திரைப்படம்

காமெடி, குடும்ப படம், திரில், பேய் படம், ஆக்சன் என அனைத்து தரப்பட்ட கதைகளையும் படமாக்கி வெற்றி கண்டவர் இயக்குநர் சுந்தர்.சி.

இவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு ஆக்சன் திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பெயரும் ஆக்சன்தான். இது  இந்திய திரைப்பட வரலாற்றில்  இதுவரையிலும் இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்சன் படமாக உருவாக்கி வருகிறது.

ஏற்கனவே ஆக்சனில்  பரபரப்பாக இருக்கும் விஷால் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

action-movie-poster-1

விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான  ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ.கருப்பையா, மற்றும் பிரபல இந்தி நடிகரான கபீர் சிங்கும் நடிக்கிறார்.

கதை, இயக்கம் – சுந்தர்.சி., திரைக்கதை – சுபா, வெங்கட்ராகவன் & சுந்தர்.சி., இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா. ஒளிப்பதிவு – DUDLEE, படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த், வசனம் – பத்ரி. கலை இயக்கம் – துரைராஜ், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் –  பிருந்தா, தினேஷ், பாடல்கள் – பா.விஜய் , ஹிப் ஹாப் தமிழா, தயாரிப்பு மேற்பார்வை – P.பால கோபி, மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு நிறுவனம் – TRIDENT ARTS, தயாரிப்பாளர் – R.ரவீந்திரன்.

sundar.c-vishal-1

படத்தில் விஷால் ஒரு மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையை கண்டுப் பிடிக்க பல நாடுகளுக்குச் செல்கிறார். அங்கே ஆக்சன், சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள்.

‘கே.ஜி.எஃப்’ படத்தில் இவர்கள் அமைத்திருந்த வித்தியாசமான சண்டை காட்சிகளுக்காக சென்ற ஆண்டுக்கான சிறந்த சண்டை பயிற்சியாளர்களுக்கான தேசிய விருதினை இவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

action-movie-poster-2

இந்க ஆக்சன் படத்திலும் இவர்கள் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள். இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருக்கிறார். இந்த சண்டை காட்சிகளுக்காகவே பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் டிரைடென்ட் ரவி .

மிக பிரம்மாண்டமான செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி TURKEY நாட்டில் AZARBAIZAN, CAPPADOCIA,BAKU, ISTANBUL, தாய்லாந்து நாட்டில் KRABI ISLAND, பாங்காக் போன்ற இடங்களில் 50 நாட்கள் நடைபெற்றது.

sundar.c-vishal-3

மேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ், டேராடூன், ஹைதராபாத்,சென்னை, போன்ற இடங்களிலும் பரபரப்பாக படமாக்கப்பட்டது. 

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின் பணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Our Score