தாருண் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஸ் அம்பேத்கார் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு ‘அச்சாரம்’ என்று பெயரிட்டுள்ளார்.
இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் – முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் ரேகா, ராஜலட்சுமி, O.A.K.சுந்தர், ஐஸ்வர்யா தத்தா, ஞானதேஸ் அம்பேத்கார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆர்.கே.பிரதாப்
பாடல்கள் – யுகபாரதி
இசை – ஸ்ரீகாந்த் தேவா
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
கலை – டி.சந்தானம்
நடனம் – ராபர்ட், ரேகா, விமல்
ஸ்டன்ட் – ஸ்பீட் சையத்
தயாரிப்பு – ஞானதேஸ் அம்பேத்கார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் பொறுப்புகளை புதியவரான மோகன கிருஷ்ணா ஏற்றுள்ளார். இவர் இயக்குனர்கள் அமிர்தம், ரமணா, அரவிந்த் நாகராஜ், விஜி, அகமத் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.
ரொமான்ஸ் மற்றும் திரில்லர் படமாக அச்சாரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மூன்றுவிதமான பரிணாமங்களில் சென்னை, கொடைக்கானல், தஞ்சாவூர் போன்ற இடங்களில் படமாகி இருக்கிறது. காலாச்சார பகிர்வாகவும் அச்சாரம் உருவாகி இருக்கிறது. கமர்ஷியல் மற்றும் காதலை கருவாக வைத்து உருவாக்கி இருக்கிறோம் என்கிறார் இயக்குநர் மோகன கிருஷ்ணன்.