எம்.ஜி.கே மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிக்கும் படம் ‘களவுத் தொழிற்சாலை’. இந்தப் படத்தில் கதிர்– வம்சி கிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மூ.களஞ்சியம் நடிக்கிறார். மற்றும் நட்ராஜ்பாண்டியன், செந்தில், ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வி.தியாகராஜன் (இவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உதவியாளர்)
இசை – ஷியாம் பெஞ்சமின் (இவர் ஹாரீஷ் ஜெயராஜிடம் பணியாற்றியவர்)
பாடல்கள் – அண்ணாமலை, நந்தலாலா
படத்தொகுப்பு – யோகாபாஸ்கர்
நடனம் – சங்கர்
சண்டை பயிற்சி – எம்.கே.லீன்
கலை – முரளிராம்
நிர்வாக தயாரிப்பு – எஸ்.என்.அஸ்ரப்
இனை தயாரிப்பு – பிரியதர்ஷினி ரவிசங்கர்
தயாரிப்பு – ரவிசங்கர்
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – டி.கிருஷ்ணசாமி
இதுவரை வெளிவராத கடத்தல் தொழிலின் இன்னொரு உலகத்தையும் அதன் சர்வதேச தொடர்புகளையும் பற்றித்தான் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதல், சஸ்பென்ஸ், திரில்லர் என்று மூன்றுவிதமாகவும் திரைக்கதை மாறி மாறி பயணிக்கிறது.
கதிர் கும்பகோணத்தில் வாழும் ஒரு அப்பாவி இளைஞனாகவும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சட்டத்தின் பிடியில் குற்றவாளியாக சிக்கி கொள்ளும் இளைஞனாகவும் நடித்திருக்கிறார். திரைக்கதையின் முக்கிய பகுதியில் வரும் கதிர் – குஷி காதல் ஒரு நிறைவான காதலை நிச்சயம் நினைவுபடுத்தும். படத்தின் ஹைலைட்டாக இயக்குனர் மூ.களஞ்சியம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்காக கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கோவிலில் கிட்டதட்ட இருநூறு அடி நீளத்திற்கு செயற்கையாக சுரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. கதையின் முக்கிய பகுதி இந்த சுரங்கத்தின் உள்ளே நடைபெறுகிறது. இந்தக் ‘களவுத் தொழிற்சாலை’ வரும் ஜூன் மாதம் வெளிவரும்.