full screen background image

மராத்தி இயக்குநர் கபீர்லால் இயக்கும் ‘உன் பார்வையில்’ தமிழ் படம்

மராத்தி இயக்குநர் கபீர்லால் இயக்கும் ‘உன் பார்வையில்’ தமிழ் படம்

பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான கபீர்லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மராட்டி திரைப்படம் ‘அதுர்ஷ்யா’. ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரும் வெற்றி பெற்றிருக்கும் இப்படம் IMDB தளத்தில் 9.5 ஸ்டார் ரேட்டிங் பெற்று உலக அளவில் சாதனை படைத்துள்ளது.

தற்போது இதே இயக்குநர் கபீர்லால், தமிழில் ஒரு திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

Lovely World Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அஜய் குமார் சிங் தயாரிப்பில்,  தமிழில் புதுமையான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள உன் பார்வையில்’  என்ற படத்தை இயக்குநர் கபீர்லால் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நாயகி பார்வதி நாயரின் கணவராக சைக்காலஜி மருத்துவராக முக்கியமானதொரு பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் நிழல்கள் ரவி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள், இன்ஸ்பெக்டராக தயாரிப்பாளர்  அஜய் குமார் சிங் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஷாஹித் லால், ஒலி வடிவமைப்பு – கபீர் லால், படத் தொகுப்பு – சதிஷ் சூர்யா, இசை – அச்சு ரஜாமணி, வசனம் – V பிரபாகர் கலை – விஜய் குமார், பப்ளிசிடி டிசைன்ஸ் – NXTGEN STUDIOS, பத்திரிகை தொடர்பு – ஆனந்த்.

பாலிவுட் முதல் இந்தியாவின் பல மொழிகளில் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கபீர்லால் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

கண் பார்வையற்ற  நாயகி, திடீரென கொல்லப்பட்ட  தன் தங்கையின் மரணத்திற்கு யார் காரணம் என தேட ஆரம்பிக்கிறாள். அவளின் தேடலும், அதை தொடர்ந்து நடக்கும் மர்மமான சம்பவங்களும்தான் இந்தப் படத்தின் கதை.  

ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் விறுவிறுப்பான திரைக்கதையில் அட்டகாசமாக உருவாகியுள்ளது இத்திரைப்படம்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில்,  தற்போது படத்தின்  வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Our Score