நவம்பர் 25-ல் திரைக்கு வருகிறது ராம்கியின் ‘ஆங்கில படம்’ 

நவம்பர் 25-ல் திரைக்கு வருகிறது ராம்கியின் ‘ஆங்கில படம்’ 

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ்  தயாரித்திருக்கும் படம் ‘ஆங்கில படம்.’ இத்திரைப்படத்தில் ராம்கி, சஞ்சீவ் இருவரும் கதாநாயகர்களாகவும், மீனாட்சி, ஸ்ரீஜா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை-எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு - சாய்சதிஷ், கலை - பழனிவேல், படத் தொகுப்பு – மகேந்திரன், புதுமுக இயக்குநரான குமரேஷ் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ஆங்கில படம்  வரும் நவம்பர் 25-ல் திரைக்கு வருகிறது. படம் பற்றி இயக்குநர் பேசும்போது, "இதற்கு ‘ஆங்கில படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம், இக்கதையில்  வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இந்தக் கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது, ‘கதை நல்லா இருக்கு; ஆனா நீ புது இயக்குனர்.. சொன்ன மாதிரி எடுப்பாயா?’ என கேட்டனர்.

ஆனால் இப்போது ராம்கி, சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. இப்படத்தில் நடித்துள்ள ராம்கி, சஞ்சீவ் இருவரையும் இந்தப் படம் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும்.  உண்மையில் நீங்கள்  இதுவரை பார்க்காத ராம்கி, சஞ்சீவை இப்படத்தில் பார்ப்பீர்கள்..." என்றார்.