ஆகம் திரைப்படக் குழுவினர் கல்லூரிகளுக்குச் சென்று தங்களது படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி மற்றும் மாணவர்களைப் பற்றிய படம் என்பதால் மாணவ மாணவிகள் இடையே இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் ‘ஆகம்’ படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஸ்ரீராமும் கதாநாயகன் இர்பானும், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிகள் மூலம் பிரபலம் என்பதால் அவருக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.
படத்தின் மையக் கருத்தைப் பற்றி விளக்கிக் கூறிய இர்பான், இயக்குநர் ஸ்ரீராமின் சிந்தனையைப் பற்றி வெகுவாகப் பாராட்டினார். நாயகி தீக்ஷிதாவும், ஜெயஸ்ரீயும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.