full screen background image

அப்துல்கலாமின் ‘கனவு 2020’ பற்றிய படம்தான் ஆகம்..!

அப்துல்கலாமின் ‘கனவு 2020’ பற்றிய படம்தான் ஆகம்..!

தமிழ் திரையுலகில் கடந்த 12 வருடங்களாக இர்பான் பணியாற்றி வருகிறார். சின்னத்திரையில் துவங்கி தற்போது வெள்ளித்திரை என பல வருட உழைப்பிற்கு பிறகு அவர் வந்து நிற்கும் கரைதான் இந்த ‘ஆகம்’ திரைப்படம்.  

அவரது திரை பயணத்தில் சிறந்த இடத்தை பிடித்து தரப் போகும் இந்த ‘ஆகம்’ திரைப்படம், வரும் மார்ச்-18 வெள்ளியன்று திரைக்கு வர இருக்கிறது.

‘ஆகம்’ தற்கால சமூகத்தில் இளையவர்கள் முன் இருக்கும் நெருக்கடியே கதை  இந்திய நாட்டு இளைஞர்களின் மூளையை சர்வதேச நாட்டு கம்பெனிகள் எவ்வாறு விலைக்கு வாங்கி அடிமைப்படுத்துகின்றனர் என்பதே இதன் கதை.

‘ஆகம்’ படத்திற்கு ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். படத்தை கோடீஸ்வர ராஜ், ஹேமா ராஜ் தயாரித்துள்ளனர்.

“இந்தப் படம் மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல் காலம் அவரின் கனவு 2020 பற்றிய படம். இதனால் இந்தப் படத்தை பற்றிய ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெருகி வருகிறது.

நம் நாட்டில் தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது வேலையில்லா திண்டாட்டமும், ஊழல் மற்றும் மூளை வடிகாலும்தான். இதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக திரில்லர் படமே இந்த ‘ஆகம்’.  

நான் இந்த படத்தில் சமூக  பொறுப்புணர்வுள்ள நபராக நடித்துள்ளேன். என் வயதை மீறிய கதாபாத்திரம்தான். இருந்தாலும், அது படத்தின் கதையை பாதிக்காதவண்ணம் நடித்துள்ளேன். இயக்குநரும் என்னை அவ்வாறே வேலை வாங்கியுள்ளார்.

இயக்குநர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ‘ஆகம்’ படத்தை மிகவும் புதுமையாக யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் எடுத்து உள்ளார். சிறந்த திரைக்கதையுடன் என்னை பார்க்க வந்தார் இயக்குநர். சொன்னது போலவே படத்தையும் இயக்கியிருக்கிறார்..” என்கிறார் நாயகன் இர்பான்.

Our Score