full screen background image

படக்குழுவின் வயது 26-க்குள்.. அதனால் இளமையான படமாம்..!

படக்குழுவின் வயது 26-க்குள்.. அதனால் இளமையான படமாம்..!

‘ஆஹா கல்யாணம் ‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகும் இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கோகுல்கிருஷ்ணா, தன்னுடைய இந்த முதல் படத்தின் மேல் உள்ள காதல், திருமண பந்தம் போல நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

“இந்த படத்தின் மேல் எனக்கு உள்ள காதல் இது என்னுடைய முதல் படம் என்பதால் மட்டுமல்ல. படத்தின் தரமும், இந்தியாவின் மிக சிறந்த காதல் படமான ‘ பேண்ட் பஜா பராட்’ படத்தை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றி வழங்கி உள்ளேன் என்ற பெருமையும்தான். படத்தின் முதல் பிரதியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

சக்தியாக தெலுங்கு நடிகர் நானியும், ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி திரையில் இவர்களது இளமை குறும்பு கொப்பளித்து கொண்டே இருக்கும். எந்த ஒரு காதல் கதையின் வெற்றிக்கும் இளமையான நல்ல நாயக, நாயகி, இனிமையான இசை, கண்ணை கவரும் காட்சி அமைப்பு, மற்றும் இளமையான பாடல் வரிகள் போன்றவைதான் அடிப்படை உத்திரவாதம். இந்த அனைத்து அம்சங்களும் அமையப் பெற்ற இந்த படத்தை இயக்குவது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமே. எங்களது ஒட்டு மொத்த குழுவுக்கும் சராசரி வயது 26-க்கு மேல் இருக்காது. அதனாலேயே இந்த காதலர் மாதத்தில், காதலர்களை மட்டுமல்ல எல்லோரையும் கவரும்வகையிலான ஒரு படத்தை வழங்க முடிந்ததாக எண்ணுகிறேன்..” என்று கூறியுள்ளார்.

எல்லாஞ்சரிதான்.. இந்தியாவையே கலக்கிய காதல் படமான ‘ஏக் தூஜே கலியே’வை இயக்கியபோது இயக்குநர் சிகரத்திற்கு என்ன வயதாம்..?

Our Score