full screen background image

மொராக்கோவில் ‘யான்’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததாம்..!

மொராக்கோவில் ‘யான்’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததாம்..!

என்னதான் மானாமதுரை ஆஸ்பத்திரியில் கிளீனர் வேலை பார்க்கும் ஹீரோவாக இருந்தாலும், டூயட் பாட சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு போயே தீர வேண்டும் என்பது இந்தியச் சினிமாக்களில் எழுதப்படாத விதி. அதிலும் ‘கனமான’ தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டால் இரட்டிப்பு சந்தோஷம்.. ஒரு சின்ன முணுமுணுப்புகூட இருக்காது..

‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தினைத் தயாரித்த RS infotainment எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிக்கும் படம் யான். இதில் ஜீவா ஹீரோவா நடிச்சிருக்கார். பழைய நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஹீரோயின். நாசர், ஜெயபிரகாஷ், தம்பிராமையா, ‘சூது கவ்வும்’ கருணா நடிப்பில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருக்காரு. இவர் இயக்கும் முதல் படம் இதுவேயாகும்.

jeeva-1

படப்பிடிப்பு ஏற்கெனவே 60% முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை மொரோக்கோ நாட்டில் படமாக்கி உள்ளனர். மூன்று வாரங்கள் அங்கு தங்கி படப்பிடிப்பு நடத்திய படக் குழுவினர், அங்கே இந்த வருடம் பெய்த வரலாறு காணாத கடும் பனியையும் பொருட்படுத்தாமல், உக்கிரமான சண்டை காட்சிகளையும், கண்கவரும் பாடல் காட்சிகளையும் படமாக்கியுள்ளனர்.

jeeva-2

துரித வேகத்தில் படப்பிடிப்பை நடத்திய இயக்குநர் ரவி.கே.சந்திரனின் வேகத்தையும், படமாக்கும் நேர்த்தியையும் கண்டு Bourne ultimatum , The Mummy, Zero dark 30, Body of lies , Kingdom of heaven ஆகிய உலக தரம் வாய்ந்த படங்களில் பணியாற்றிய மொராக்கோ நாட்டு பட குழுவினர் பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள்.

jeeva-musthafa

3 வார ஷூட்டிங் இன்றோடு முடிவடைந்ததாம். படக்குழுவினர் தனக்கு மிக ஒத்துழைப்பு கொடுத்து உதவியதாக இயக்குநர் ரவி.கே.சந்திரன் குறிப்பிட்டு அவர்களுக்கெல்லாம் நன்றின்னு டிவீட் செஞ்சிருக்காரு. பதிலுக்கு படத்தோட ஹீரோ ஜீவாவும் இதே போல் படத்தின் உருவாக்கத்துக்கு மொராக்கோவில் உதவிகள் செய்த மொராக்கோ நாட்டினருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லியிருக்காரு..!

jeeva-3

இணையத்தள வசதிதான் எத்தனை, எத்தனை செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கிறது பாருங்க..

Our Score