காலையில் முழித்தவுடன் நல்ல விஷயம் கண்ணில்பட்டால் அன்றைய நாளில் ஒரு கோடியை அள்ளப் போவதுபோல ஒரு சந்தோஷம் வருமே.. அது மாதிரி இன்னிக்கு கண்ணுலபட்ட நல்ல நியூஸ் ஹன்ஸிகா மோத்வானிக்கும், சிம்புவுக்குமான காதல் புட்டுக்கிச்சு என்பதுதான்.
இது போன்ற நல்ல செய்திகளை உடனுக்குடன் அறிய வேண்டுமெனில் நீங்கள் இவர்களை 24 மணி நேரமும் பாலோ செய்தாக வேண்டும்.. நேரில் முடியாத பட்சத்தில் நமக்கும், அவர்களுக்கும் தொடர்புள்ள டிவிட்டரிலாவது தொடர வேண்டும். ஒரேயொரு ஒற்றை வரியில் ‘my single ladies’ எனப்பட்ட வார்த்தைகளில் தனது காதலை குழி தோண்டி புதைத்திருக்கிறார் ஹன்ஸிகா என்பதை ஊகிக்க முடிகிறது.
சமீபத்தில வந்த சிம்புவின் பிறந்த நாளன்னிக்கு நடுராத்திரி 12 மணிக்கு சிம்பு ஷூட்டிங்ல இருந்த இடத்துக்கே வந்து கேக் வெட்டி வாழ்த்தியிருக்கு பொண்ணு.. அடுத்த நாளு பார்க் ஹோட்டல்ல காலைல இருந்து ராத்திரிவரைக்கும் நடந்த மப்பு பார்ட்டிக்கும் வந்திருக்கு.
அதுக்கப்புறம்தான் ரொம்ப, ரொம்ப முக்கியமான சிம்புவின் தங்கச்சி கல்யாணத்துக்கு வராமல் போனது ஒரு சிறந்த பின்னடைவுதான்.. சம்பந்தி வீடுன்னா குடும்பத்தோட வந்திருக்க வேண்டாம்.. ஸோ.. ஏதோ பெரிய முடிவை அந்தப் பொண்ணு எடுத்திருக்கும்னு நினைக்கலாம்..!
வயசென்னவோ 21-தான் ஆகுது.. இன்னமும் சாதிக்க இல்ல.. இல்ல.. சம்பாதிக்க வேண்டியது நிறையவே இருக்கு.. அதுக்குள்ள எதுக்கு கைல கரண்டியை தூக்கணும்.. இந்த வயசுலேயே எதுக்கு இடுப்புல புள்ளைய தூக்கணும்..? பாப்பா எந்திரிச்சாச்சா..? கிளம்பியாச்சா..? வண்டில ஏறியாச்சா..? ஜூஸ் ரெடியா இருக்கு.. மீல்ஸ் ரெடியா இருக்கும்மா.. சாப்பிட்டாச்சாம்மா.. தூங்கியாச்சாம்மா..? என்றெல்லாம் அக்கறையோடு விசாரிக்க குடும்பத்தையும் தாண்டி தயாரிப்புத் திலகங்களெல்லாம் காத்திருக்கும் நிலையில், மற்றவர்களை நாம் விசாரிக்க வேண்டிய குதர்க்கத்தில் ஏன் மாட்டிக்கணும்னு நினைச்சுட்டாங்க போல.. இது நூறு சதவிகிதம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் சிறந்த முடிவுதான்..!
சிம்புவுக்கு இதைவிட நல்ல பொண்ணு நிச்சயமா கிடைக்கும்.. அது நயன்தாராவாகவே இருந்தாலும் சரி..!