முள்ளமூட்டில் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ரோகித் மேத்யூவ் தயாரித்துள்ள புதிய படம் ‘பட்டினப்பாக்கம்’.
இதில் கலையரசன் கதாநாயகனாகவும், அனஸ்வரா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
மேலும், சாயா சிங், யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு, மதுமிதா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கலை – மோகன மகேந்திரன், பி.ஆர்.ஓ. – நிகில், ஒளிப்பதிவு – ராணா, இசை – இஷான் தேவ், படத் தொகுப்பு – அதுல் விஜய், திரைக்கதை, வசனம் – வி.அரசு, இணை தயாரிப்பு – சுகுமார் தெக்கப்பெட், தயாரிப்பு – ரோகித் மேத்யூவ் முள்ளமூட்டில், இயக்கம் – ஜெயதேவ். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையான பாவனாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பட்டினப்பாக்கம்’ படத்தை S.P.சினிமாஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. S.P.சினிமாஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக பல்வேறு ஆங்கில படங்களை உலகெங்கும் வினியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.









