“ஒருத்தனை ஏமாத்தணும்னு நினைச்சாm மொதல்ல அவன்கிட்ட பணத்தோட ஆசையைத் தூண்டிவிடணும்…” என்கிற ஒருவரை வஞ்சமாக ஏமாற்றி கொள்ளையடிப்பதன் சூத்திரத்தைக் கற்றுக் கொடுத்த வெற்றி படம் ‘சதுரங்க வேட்டை’.
நடிகர் மனோபாலா தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான பிக்சர் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்த அந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து அவரையும் வெற்றிகரமான தயாரிப்பாளராக மாற்றியது.
இப்போது அதே பாணியில் புதிய வடிவத்திலான கொள்ளையடிப்பை கதைக்களமாக்கி அதற்கு ‘சதுரங்க வேட்டை பாகம் இரண்டு’ என்கிற பெயரில் புதிய படத்தைத் துவக்கியிருக்கிறார் தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா.
இந்தப் புதிய படத்தில் அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணா, மனோபாலா, மயில்சாமி, R.N.R. மனோகர், யோகிபாபு, ஸ்ரீமன், குமாரவேல் ஆகியோரும் நடிக்கின்றனர்.
கலை – N.N.மகேந்திரன், ஒப்பனை – கோதண்டம், உடைகள் வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், உடைகள் – ரங்கசாமி, சண்டை பயிற்சி – R. சக்திசரவணன், நடன இயக்குநர் – அஜய் சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம் – R.P.பால கோபி, தயாரிப்பு மேலாளர் – S.ஜெயகர் விஸ்வநாதன், அலுவலக நிர்வாகம் – D.நடராஜன், ஸ்டில்ஸ் – ஸ்டில்ஸ் ரவி, மக்கள் தொடர்பு – நிகில், ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், இசை – அஸ்வமித்ரா, பாடல்கள் – அறிவுமதி, யுகபாரதி, படத் தொகுப்பு – S.P.ராஜா சேதுபதி, கதை-திரைக்கதை-வசனம்- H. வினோத், தயாரிப்பு – மனோபாலா, இயக்கம் – N.V. நிர்மல்குமார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று தயாரிப்பாளர் மனோபாலாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.