பாரம்பரியமிக்க தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் 8 ஆண்டுகளுக்கு பிறகு மிண்டும் நடக்கவுள்ளது.
முன்று அணிகள் போட்டியிடும் இத்தேர்தலில் நடுநிலை அணி சார்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். A.கன்னியப்பன் தலைமையில் ஒரு அணியும், G.சிவா தலைமையில் ஒரு அணியும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
8 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் இத்தேர்தல் வருகிற ஜனவரி 10-ம் தேதி நடைப்பெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலை அணி’ என்கிற தலைப்பில் பிரபலமான ஒளிப்பதிவாளர்கள் பலரும் போட்டியிடுகிறார்கள்.
Neutral Team – நடுநிலை அணி
தலைவர் – பி.சி.ஸ்ரீராம்
செயலாளர் – பி. கண்ணன்
பொருளாளர் – ராம்நாத் ஷெட்டி
துணைத் தலைவர்கள் – ராஜீவ் மேனன், பிரியன்
துணைச் செயலாளர்கள் – இளவரசு, பி.பாலமுருகன், ஜெ.ஸ்ரீதர்
செயற்குழு உறுப்பினர்கள்
கே.ஏகாம்பரம்
அரவிந்த் கிருஷ்ணா
ஆரோக்கியதாஸ்
என்.அழகப்பன்
ஆர்.திவாகரன்
வி.இளம்பரிதி
டி.கண்ணன்
ஏ.கார்த்திக்ராஜா
ஆர்.டி.ராஜசேகர்
எம்.சுகுமாரன்
ஆர்.வேல்ராஜன்
இந்த அணியினரின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் 3 மணிக்கு பிரசாத் கலர் லேப் தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டு போட்டியிடுவதற்கான காரணங்கள் மற்றும் தங்களுடைய செயல்பாடுகள், வாக்குறுதிகள் பற்றி விளக்கமளித்தார்கள்.






















