‘நஸ்மா பிக்சர்ஸ்’ சார்பில் அயாஸ்கான் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் ‘ஐயங்கன்’.
இயக்குநர் தனுஷ் பாண்டியன் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை – பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் நடைபெறுகிறது,
படத்தின் நாயகனாக நௌஷத்கான் மற்றும் நாயகியாக பூர்ணிமா அறிமுகமாகிறார்கள், மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
பொதுவாக படத்தின் கதை என்ன என்று கேட்டால் பட ரிலீஸுக்கு பின்புகூட அப்படத்தின் இயக்குநர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநரோ, படத்தின் ஷூட்டிங் துவங்கி அன்றே மொத்தக் கதையையும் மீடியாக்களிடம் சொல்லிவிட்டார்.
“ஐயங்கன்’ என்பது நம்மை சுற்றியிருக்கும் ஒரு அமானுஷ்யம் என்று அர்த்தமாகும். பெரிய மந்திரவாதியாக வேண்டுமென்ற ஆசையில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இருக்கும் பெண்ணை நரபலி கொடுக்க திட்டம் போடுகிறான் ஒரு மந்திரவாதி. அதன்படி ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து அந்த பெண்ணை கடத்திச் செல்ல முயற்சி செய்கிறான் அந்த மந்திரவாதி.
படத்தின் நாயகன் நவ்ஷத்கான் பெரிய மேஜிக்மேனாக இருக்கிறார். விலை உயர்ந்த பைக்கை வாங்கிக் கொண்டு நாயகி பூர்ணிமாவுடன் சேர்த்து சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலா செல்கிறார். போன இடத்தில் நாயகி பூர்ணிமாவை அந்த மந்திரவாதி கடத்தி விடுகிறான். மந்திரவாதியால் கடத்தப்பட்ட தன் காதலியை நாயகன் எப்படி அவனுக்கு தெரிந்த மேஜிக்கை வைத்து மீட்கிறானா இல்லையா..? என்பதுதான் மீதிக் கதை..” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் இயக்குநர் தனுஷ் பாண்டியன்.
நீங்கெள்லாம் நல்லா வருவீங்க ஸார்..!









