full screen background image

பாடல் வெளியான பின்பு படமாக்கப்பட்டு வரும் ‘காதல் கனிரசம்’ பாடல்..!

பாடல் வெளியான பின்பு படமாக்கப்பட்டு வரும் ‘காதல் கனிரசம்’ பாடல்..!

JSK சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s எண்ட்டெர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd. ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’.

அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு அறிமுக இசையைமைபாளர் BR ரெஜின் இசையமைத்துள்ளார்.

தற்கால இசை நுணுக்கங்களுடனும் அறுபதுகளின் தனித்த ஒலியமைப்புடனும் இருக்கும் ‘காதல் கனிரசம்’ என்ற பாடல் வயது வித்தியாசமின்றி அனைவரையும் ஈர்த்துள்ளது.

 படத்தின் பாடல்களை படமாக்கி விட்டு பின் பாடல்களை வெளியிடுவதுதான் தமிழ் சினிமா பாரம்பரியம். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஈடு செய்யும் வகையில் நல்ல கதையம்சமுள்ள ஜனரஞ்சக படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் JSK சதீஷ். இவர் சற்று வித்தியாசமாய் படத்தின் பாடல்களை முன்னரே வெளியிட்டு பின் அதை படமாக்க திட்டமிட்டு இருந்தார். இது தமிழ் சினிமாவில் அரிதாய் நடக்க கூடிய ஒரு நிகழ்வு.

சென்னையை அடுத்த  பூந்தமல்லி அருகேயுள்ள ‘சொக்கிதானி’ என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அழகிய அரங்கப் பின்னணியில் இந்தக் ‘காதல் கனிரசம்’ பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

“இந்தப் பாடல் ரசிகர்களை கவரும் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்படி அனைவரது எதிர்பார்ப்பிற்குரிய பாடலாய் மாறும் என்று நினைக்கவே இல்லை. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் தயாராகி வருகிறது ‘காதல் கனிரசம்’ பாடல்..” என்கிறார் தயாரிப்பாளர் JSK சதீஷ்.

Our Score