full screen background image

காசினோ தியேட்டரில் கைலாயம்!

காசினோ தியேட்டரில் கைலாயம்!

அருட்செல்வர் ஏபி நாகராஜனின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம் மறு வெளியிட்டில் நேற்று முதல் தமிழகமெங்கும் வெளியானது.

சென்னையில் சத்யம், தேவி பேரடைஸ் காசினோ உட்பட பல திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்தத் திரைப்படம் தமிழகம் எங்கும் 150 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

60 ஆண்டுகளுக்கு பின்னாலே வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டை கொண்டாடுகின்றவிதத்தில் சிவாஜி ரசிகர்கள் பலர் காசினோ தியேட்டரில் கைலாயத்தையே செட்டாக வடிவமைத்துள்ளனர்.

இந்த கைலாயத்துக்கு நடுவே சிவபெருமானுடைய தோற்றத்தில் சிவாஜி கம்பீரமாக அமர்ந்திருக்கின்ற காட்சி எல்லோரையும் கவர்ந்துள்ளது.

தினமும் மாலை வேலைகளில் சிவனாக உள்ள சிவாஜிக்கு தீபாராதனை நடத்தி பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

Our Score