திரைப்பட தயாரிப்பு பணிக்காக முன் பணம் பெற்று ₹14.29 லட்சம் மோசடி!
நடிகர் முகேன் ராவ், இயக்குநர் எம். கவின், இயக்குநர் டி.ஆர். பாலா மற்றும் மேலாளர் ஹரிஷ் மீது தயாரிப்பாளர் பாண்டி @ மலேசியாபாண்டியன் புகார்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP), சென்னை காவல் ஆணையர் (COP) மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் (CM Special Cell) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக FIR பதிவு செய்து விசாரணை நடத்தவும், பணத்தை மீட்டுத் தரவும்,
திரு. முகேன் ராவ் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக அவரைத் தடுத்து நிறுத்த தகுதியான காவல்துறை அதிகாரிகள் மற்றும் குடியேற்றப் பணியகம் (Bureau of Immigration) மூலமாக உடனடியாக Look Out Circular (LOC) பிறப்பிக்கக் கோரிக்கை!
சென்னை / மதுரை:
கடந்த 31.01.2022 அன்று ₹2.50 கோடி பட்ஜெட்டில் ‘PRODUCTION NO -1’ திரைப்படத்தைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துகொண்டு, ₹10,55,000 முன்பணம் பெற்று படத்தைத் தொடங்காமல் ஏமாற்றியதாக
நடிகர் முகேன் ராவ், இயக்குநர் எம். கவின், இயக்குநர் டி.ஆர். பாலா மற்றும் மேலாளர் & PRO ஹரிஷ் ஆகியோர் மீது
M/s. SPS AV International உரிமையாளர் திரு. பாண்டி @ மலேசியாபாண்டியன் சட்டப்பூர்வப் புகார் அளித்துள்ளார்.
பகுதியாக ₹3,00,000 மட்டும் திருப்பித் தரப்பட்ட நிலையில், வட்டியுடன் சேர்த்து ₹14,29,076 நிலுவைத் தொகையைத் தராமல் ஏமாற்றிவிட்டு,
இவர்கள் கூட்டாக இணைந்து ‘JINN’, ‘NIRAM’ (27.11.2026 வெளியீடு) மற்றும் ‘MILO’ ஆகிய படங்களில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (TFPC), தென்னிந்திய நடிகர் சங்கம் (SIFAA), தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் (TANTTIS) மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (SIFCC) ஆகிய சங்கங்களிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால்,
10.11.2026 அன்று முதலமைச்சரின் தனிப் பிரிவிலும் (TN/HOMEEXC/MDU/I/CMCELL/17NOV26/19620045),
இன்று (21.11.2026) அவசரப் புகார் மனுவாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டு e-CSR எண்: OLC9262600080956 பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலேசியக் குடிமகனான நடிகர் முகேன் ராவ் ‘NIRAM’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பின் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால்,
உடனடியாக Look Out Circular (LOC) பிறப்பித்து, அவர் மற்றும் அவரது சகாக்கள் மீது FIR பதிவு செய்து பணத்தை மீட்டுத் தருமாறு காவல் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.









