full screen background image

ஹனி டிராப் கதையில் நடித்திருக்கும் அர்ஜுன்!

ஹனி டிராப் கதையில் நடித்திருக்கும் அர்ஜுன்!

டி எஸ் ஆர் பிலிம்ஸ், மொபின் புரொடக்ஷன்ஸ், சமீர் ப்ரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் படம் ‘பங்’.

இந்தப் படத்தை எம்.டி.சலார் பெயிக் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் அர்ஜுன், குட்டி ராதிகா, அர்ச்சனா கௌதம், சோனி சிரிஸ்ட்டா, ஜே.டி.சக்கரவர்த்தி, ராம் ஜெகன், கே.விஸ்வநாத், சமீர், அசோக் குமார், அபித் பூஷன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அமீர்லால், இசை – சுபாஷ், பின்னணி இசை – சைமன் கே.கிங், எழுத்து, இயக்கம் – எஸ்.எஸ்.சமீர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சமீர் பேசும்போது,

“ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை கனி ட்ராப் மூலம் வில்லன் ஜட்டி சக்கரவர்த்தி கொள்ளையடிக்க முயற்சிக்கிறார். 

இந்தக் கொள்ளைத் திட்டத்தை ஹீரோ அர்ஜுன் முறியடிக்கும் அதிரடி, ஆக்சன் களமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

பிரம்மாண்டமான செலவில் மும்பை, பெங்களூர் முதலிய நகரங்களிலும் பாங்காங்கிலும் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது” என்றார்.

Our Score