கிரிஞ்ச் பயர் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.பிரியா தயாரித்து, இயக்குநர் வினய் நாராயணன் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘பித்தன்’.
இந்தப் படத்தில் பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்திருந்த ‘மைம்’ கோபி ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
கதாநாயகியாக புதுமுக நடிகை சினேகா நடிக்கிறார். மேலும், ஆடுகளம் முருகதாஸ், ஆரியன், கூல் சுரேஷ், கல்கி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், இசை – எஸ்.பி.பூபதி, படத்தொகுப்பு – சிஎஸ் பிரேம் குமார், சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், நடனம் – தினேஷ், பாடல்கள் – சினேகன், மெட்ராஸ் மீரான்.
இந்தப் ‘பித்தன்’ படம் பற்றி இயக்குநர் வினய் நாராயணன் பேசும்போது,
“கதையின் நாயகன் ஒரு டூவீலர் மெக்கானிக். தன் சொந்த ஊரில் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். திடீரென ஒரு புயல் போல் ஏற்பட்ட பிரச்சனையினால் தன் சொந்த ஊரைவிட்டுவிட்டு சென்னைக்கு வந்து குடியேறுகிறான்.
ஹீரோ சென்னைக்கு வந்த பின்பு போலீஸ் மற்றும் ரவுடிகள் ஹீரோவை தேடி வருகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியுள்ளோம்” என்றார்.









