full screen background image

வெற்றி, வாணி போஜன் இணைந்து நடிக்கும் ‘ரேவன்’ திரைப்படம்!

வெற்றி, வாணி போஜன் இணைந்து நடிக்கும் ‘ரேவன்’ திரைப்படம்!

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’.

இப்படத்தின் தொடக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ‘ரேவன்’ படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் சக்தி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சேதுராஜன் ராஜகோபால் மற்றும் R.V. சரண் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றுகின்றனர். வே. வெற்றிவேல் சந்திரசேகர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஆபிஸ்’ வெப் தொடருக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர். மேலும் ‘பீட்ஷா 3’ திரைப்படத்திற்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் வே. வெற்றிவேல் சந்திரசேகர் கூறியதாவது:

“ரேவன்’ ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம். எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன் எழுதிய ‘படுகளக் காதை’ நாவலைத் தழுவி இப்படத்திற்கான கதையை உருவாக்கியிருக்கிறேன்.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 30 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஒரு தொடர் கொலையாளி கைது செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் தாக்கமும் இந்தத் திரைக்கதையின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அந்த உண்மைச் சம்பவத்தை அப்படியே பதிவு செய்யாமல், அதன் தாக்கத்தில் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம்.

இப்படத்தில் காக்கைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. காகத்தை நமது முன்னோர்களின் வடிவமாகப் பார்க்கும் நம்பிக்கை நமது பண்பாட்டில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. அந்த நம்பிக்கைக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காக்கையைத் தத்ரூபமாக உருவாக்கி, பயன்படுத்துகிறோம். இதைத் திரையில் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

க்ரைம் த்ரில்லருக்கான விறுவிறுப்பைத் தாண்டி, நமது சமூகத்தில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருக்கும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையையும் ‘ரேவன்’ அழுத்தமாகப் பேசுகிறது” என்றார்.

சென்னை, கோவை, ஈரோடு மற்றும் பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் ‘ரேவன்” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பை விரைவில் நிறைவு செய்து, இந்த ஆண்டு இறுதியில் ‘ரேவன்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

‘ரேவன்’ – தொழில் நுட்பக் குழு ;

நடிகர்கள்: கருணாஸ், வெற்றி, வாணிபோஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சுபத்ரா, சரவணன் ஷக்தி மற்றும் பலர், தயாரிப்பு: பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்: செல்லமுத்து குப்புசாமி

எழுத்து இயக்கம்: வெற்றிவேல் சந்திரசேகர் வே
ஒளிப்பதிவு: சேதுராஜன் ராஜகோபால் & R.V. சாண்,
படத்தொகுப்பு: சா.சிவப்பிரகாஷ்,
கலை இயக்கம்: வாசுதேவன்,
ஸ்டண்ட்: தினேஷ் காசி,
 பிஆர்ஓ: ரியாஷ் அஹமத்
தயாரிப்பு நிர்வாகம்: கண்ணன் G

‘Raven’ – A Film Featuring Karunas and ‘8 Thottakkal’ Fame Actor Vetri to Be Released Together ;

A Film That Reflects the Depth of Human Relationships.

Produced by Bonport Creative Solutions Private Limited, the new film ‘Raven’, featuring Karunas, is progressing with its shooting schedule in full swing. The film explores the depths of human relationships and emotional connections.

Actors Karunas and ‘8 Thottakkal’ fame Vetri play the lead roles in the film. They are joined by Vani Bhojan, Anumol, Renuka, Vishweshwaran, ‘Ratchasan’ Vinoth Sagar, Sampara, and several others in important roles.

Producer Chetturajan Rajagopal and R.V. Saran are presenting the film. V. Vetri Vel Selvakumar is making his directorial debut with this film. The film’s cinematography is handled by V. Vetri Vel Selvakumar himself. The film’s music is composed by Ajoy. The film also features a special song by singer Aishwarya, along with lyrics, a special song sequence, and a dance sequence.

Speaking about the film, director V. Vetri Vel Selvakumar said:

“‘Raven’ is a crime thriller. I am creating a story inspired by incidents that have taken place in the lives of people around us.

In particular, this film is being made with the aim of presenting a story that is relevant to today’s society, drawing inspiration from incidents that have taken place over the past 30 years in Tamil Nadu and across the world. Rather than presenting these incidents merely as a collection of events, we are creating a crime thriller that explores the deeper aspects of human relationships. This film is being made with the intention of presenting that truth in a compelling manner.

The film focuses on the important aspects that affect the lives of people. The story follows the journey of characters whose lives are shaped by their experiences. Their trust and the relationships they share form an important connection in the film.

We are using computer graphics technology to bring the story to life effectively. This will provide a different experience for audiences when they watch the film in theatres.

Through ‘Raven’, we are attempting to present a crime thriller that reflects the realities of society and leaves a lasting impression on the audience.”

The film ‘Raven’ is currently progressing with its shooting schedule in Chennai, Kovai, Erode, and several other locations.

The film’s post-production work is nearing completion, and the film is planned for release in theatres later this year.

RAVEN – Technical Team
Cast :
Karunas, Vetri, Vani Bhojan, Anumol, Renuka, Vishweshwaran, ‘Ratchasan’ Vinoth Sagar, Sampara, Saravanan Sathi, and others.

Producer : Bonport Creative Solutions Private Limited
Production : Bonport Creative Solutions Private Limited
Written and Directed by :V. Vetri Vel Selvakumar
Cinematography : Chetturajan Rajagopal & R.V. Saran
Music : Ajoy
Art Direction: S. Kabilan
Editing : V. Vetri Vel Selvakumar
Choreography :Vasanth, S. Dinesh
Costume Design : S. Kabilan
Publicity Design : Kannan G

Our Score