full screen background image

பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் புதிய மியூசிக்கல் ஹாரர் படம் பூஜையுடன் துவங்கியது!!

பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் புதிய மியூசிக்கல் ஹாரர் படம் பூஜையுடன் துவங்கியது!!

பெரும் வரவேற்பைப் பெற்ற “வல்லமை” திரைப்படத்தைத் தொடர்ந்து, பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

இசையும், திகிலும் இணையும் வித்தியாசமான முயற்சியாக உருவாகும் இந்த புதிய மியூசிக்கல் ஹாரர் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் இனிதே துவங்கியது.

இந்தப் படத்தை கருப்பையா முருகன் தயாரித்து இயக்குகிறார். வணிக அம்சங்களுடன் புதுமையான திரைக்கதையை ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாகி வரும் இப்படம், மியூசிக்கல் ஹாரர் ஜானரில் புதிய அனுபவத்தை தரும் என படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரேம்ஜி நடிக்கிறார். மேலும் மெல்வின் டேவிட், சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

நடிகை அனுஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், கதாநாயகனாக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் பிரேம்ஜி பணியாற்றுகிறார்.

திகில் காட்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி கவனிக்க, படத் தொகுப்பை விது ஜீவா மேற்கொள்கிறார்.

தொழில் நுட்ப ரீதியாகவும் தரமான படைப்பாக உருவாகும் வகையில் படக் குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

படப்பிடிப்பின் முதல் நாளிலேயே நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழுவினர் உற்சாகமாக கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கினர்.

தற்போது படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மியூசிக், மர்மம், திகில் ஆகிய மூன்றையும் இணைத்து ரசிகர்களுக்கு புதிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாகி வரும் இந்த புதிய திரைப்படம், விரைவில் தனது அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக படக் குழு தெரிவித்துள்ளது.

Our Score