full screen background image

நடிகர் விமலுக்கு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை!

நடிகர் விமலுக்கு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விமல்.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘விலங்கு’ வெப் சீரிஸ் உள்ளிட்டவை விமல் நடிப்பில் சூப்பர் ஹிட்டானவை.

விமல் நடிப்பில் உருவான ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக ‘அரசு பிலிம்ஸ்’ கோபி என்பவரிடம் நடிகர் விமல் கடன் வாங்கியிருந்தார்.

அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாததால், அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு பிலிம்ஸ் கோபிக்கு வழங்க வேண்டிய தொகையை நடிகர் விமல் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது..

மேலும், காசோலை மோசடி வழக்கில் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய நடிகர் விமலுக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Our Score