full screen background image

‘கேங்’ படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்..!

‘கேங்’ படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்..!

நான்கு சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றுள்ள ‘GANG'(கேங்) படத்தின் போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளிட்டுள்ளார். 

‘தீரன்’, ‘இரும்புத்திரை’, ‘கே.டி’, ‘காளி’, ‘தமிழ் படம்-2’, ‘ஹீரோ’, ‘விக்ரம்’, சமீபத்தில் வெளியான ‘தக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குணா இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த தாமினி தேவ் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் ‘சாட்டை’ அன்பழகனிடம் உதவி இயக்குநராக இருந்த தீனதயாளன் தனது முதல் படமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

“இந்த படம் பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும்..” என்கிறார் இயக்குநர் தீனதயாளன்.

இசை – டோனி பிரிட்டோ(கூர்மன், J.பேபி.), படத் தொகுப்பு – செஞ்சி மாதவன்(தில்லுக்கு துட்டு-2, இடியட்). ஒளிப்பதிவு – பெருமாள், பத்திரிகை தொடர்பு சி.என். குமார்.

Our Score