‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய படங்களுக்குப் பிறகு, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து, இயக்கும் படம் ‘உயிர்த் துளி’.
இந்தப் படத்தில் நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், காவியா, நித்யமது, கலை, கவிதா ஸ்ரீ, பிரியதர்ஷினி, எலிசபெத், சிங்கமுத்து, மதன்பாப், ரவிமரியா, ரோபோ சங்கர், மதுரை முத்து, பவர்ஸ்டார், அருள்மணி, போண்டா மணி, ரெங்கநாதன், வையாபுரி, ஜெயமணி, தாம்ஸன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
படத் தொகுப்பு – லெனின், ஒளிப்பதிவு – கார்த்திக் ராஜா, சண்டை இயக்கம் – கனல் கண்ணன், இசை – ஜாட்ரிக்ஸ், நடன இயக்கம் – ராதிகா, கலை இயக்கம் – பாலமுருகன், டிசைன்ஸ் – மேக்ஸ், இணை இயக்கம் – செல்வம் அய்யம் பெருமாள், தயாரிப்பு நிர்வாகம் – விஜயமுருகன், யூனிட் – காவ்ய லட்சுமி, பத்திரிகை தொடர்பு – கோவிந்தராஜ்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியதோடு படத்தையும் தயாரித்திருக்கிறார் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.
கதாநாயகி இல்லாமல், கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பே இந்த ‘உயிர்த் துளி’ திரைப்படம். கொடைக்கானலில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் படத்தின் கதைக் கரு.
முழுக்க, முழுக்க கொடைக்கானலிலேயே ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்கவுள்ளது.









