ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவ்ராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிரூத் இசையமைக்கிறார்.
வித்தியாசமான ஜெயில் கதைக் களத்தை கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இதில் ஒய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
இதை உறுதிப்படுத்தும்விதமாக சமீபத்தில் இப்படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மலையாள நடிகர் மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மோகன்லால் இந்தப் படத்திற்காக வெறும் 2 நாட்கள் மட்டுமே தேதிகள் கொடுத்திருக்கிறாராம். இது சின்ன கேமியோ ரோல்தான் என்கிறார்கள்.