full screen background image

எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கும் சி.எஸ்.அமுதனின் ‘ரத்தம்’ படம்

எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கும் சி.எஸ்.அமுதனின் ‘ரத்தம்’ படம்

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம்’ படத்தின் கொல்கத்தா படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றுள்ளது..!

தயாரிப்பாளர்களான கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோரால் Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கப்படும் படம் ரத்தம்’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க.. மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ்(Family man புகழ்), O.A.K.சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன், ஸ்டாண்ட்-அப் காமெடியனான ஜெகனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இசை – கண்ணன், ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், படத் தொகுப்பு – சுரேஷ், சண்டை இயக்கம் – திலிப் சுப்பராயன் ஆகியோர் தொழில் நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

தவிர, தெருக் குரல்’ அறிவு இந்த “ரத்தம்” திரைப்படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, அந்தப் பாடலை அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமெடி கலக்கலில் வந்த  தமிழ்ப் படம்’ மூலம் புகழ் பெற்ற இயக்குநரான C.S.அமுதன், தனித்துவமான வகையில், முற்றிலும் புதிய களத்தில்  திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் என்டர்டெய்னராக இந்த ரத்தம்’  படத்தை உருவாக்குகிறார்.

தற்போது இந்த ‘ரத்தம்’ படத்தின் கொல்கத்தா ஷெட்யூல்,  இனிதே நிறைவடைந்துள்ளது. வெளிநாட்டில், சில பகுதிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில், படத்தின் மற்ற பகுதிகளின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்து விட்டதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநரின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு  ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும், அவர்கள் மேலும் உற்சாகமடைய மற்றொரு காரணமும் உள்ளது.

“இப்படத்தில் விஜய் ஆண்டனியின் புதிய லுக்கை வெளியிட விருப்பமில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது…” என்று இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்திருப்பது, இந்த ரத்தம்’ படத்தின் மீதும், விஜய் ஆண்டனியின்  புதிய தோற்றத்தின் மீதும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Our Score