full screen background image

R.J.பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்..!

R.J.பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்..!

கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான S.லக்‌ஷ்மன் குமார் தனது 7-வது படைப்பாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் R.J.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகி வேடத்தில் நடிக்க தேர்வு நடந்து வருகிறது.

ஒளிப்பதிவு – எஸ்.யுவா, படத் தொகுப்பு – ஜி.மதன், கலை இயக்கம் – ஜி.வீரமணி, மக்கள் தொடர்பு – ஜான்ஸன், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பால்பாண்டி, வசனம் – பாபு தமிழ், நேரடி தயாரிப்பு பொறுப்பு – கே.வி.துரை, இணை தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – எஸ்.லஷ்மண் குமார், எழுத்து, இயக்கம் – ஜியன் கிருஷ்ணகுமார்.

இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார், பிரித்விராஜ் நடித்த மலையாள படமான  தியான்’(‘TIYAAN’) என்ற ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்களிடம் தனி இடம் பிடித்து வரும்  R.J.பாலாஜி நடிக்கும் இப்படத்தின் கதையும் வித்தியாசமான கதைக் களம் கொண்டதுதான். இப்படம்  டார்க்-காமெடி-திரில்லர் படமாக உருவாகிறது.

படத்தின் பெயரும், மற்ற நடிகர், நடிகைகள் விவரமும்  விரைவில் அறிவிக்கப்படுமாம்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் மிக எளிமையாக நடை பெற்றது.

வரும் மார்ச் 23-ம் தேதியன்று சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

Our Score