full screen background image

பைனான்ஸியர் ஜெயின்ராஜ் ஜெயின் மகன் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘அஷ்டகர்மா’ திரைப்படம்

பைனான்ஸியர் ஜெயின்ராஜ் ஜெயின் மகன் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘அஷ்டகர்மா’ திரைப்படம்

மிஷ்ரி எண்ட்டெர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ், C.S.கிஷன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் அஷ்டகர்மா’.

ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

தயாரிப்பு – மிஷ்ரி எண்ட்டெர்பிரைசஸ், கதை, எழுத்து, இயக்கம் – விஜய் தமிழ் செல்வன், ஒளிப்பதிவு – R.B.குரு தேவ், கலை இயக்கம் – கிஷோர், இசை – L.V.முத்து கணேஷ், பட  தொகுப்பு – மணி குமரன், நிர்வாக தயாரிப்பு – பினு ராம், ஒலிக் கலவை –  A.M.ரஹமத்துல்லா, தயாரிப்பு மேற்பார்வை – A.M.A.மாலிக், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படக் குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.

இயக்குநர் விஜய் தமிழ் செல்வன் பேசும்போது, “நான் மிஷ்ரி  எண்ட்டெர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் ஸ்கிரிப்ட்டை வைத்துக் கொண்டு யாரிடமும் அலையவில்லை, இந்த நிறுவனத்திடம் மட்டும்தான் கதை சொன்னேன்.

கொரோனா சீனாவில் உச்சக்கட்டமாக இருந்த காலத்தில்தான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். இங்கு கொரோனா வராது என்று நினைத்தோம். ஆனால், கொரோனா வந்ததால் படம் லேட்டாகிவிட்டது. கிஷன் சார் மிகச் சிறந்த திறமைசாலி அவருக்கு கேமரா பயமே இல்லை. மிக அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் இருந்தது, எல்லோருக்கும் டி.ஆர். பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அவரே எழுதி பாடி விட்டார். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் இது…” என்றார்.

நடிகரும், தயாரிப்பாளருமான கிஷன் பேசும்போது, “கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. எனக்கு இது முதல் மேடை. இது எனது சிறு வயது கனவு. அப்பா படம் தயாரித்தபோது அதில் நடித்த அர்ஜீன் ஸார், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள், என்னிடம் “படத்தில் நடிக்கிறியா..?” எனக் கேட்டார். நான் தலையாட்டினேன். அவரால்தான் அன்று மனதில் நான் நடிகனாக வேண்டும் என பதிந்துவிட்டது.

அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் டான்ஸையும், நடிப்பையும் கற்றுக் கொண்டேன். திரும்பி வந்தவுடன் அப்பாவிடம் “சினிமாவில் நடிக்க வேண்டும்” என்றேன். ஆனால் அவரோ, “இப்போது வேண்டாம்” என்றார். அப்புறம் கல்யாணமாகி பிஸினஸில் மூழ்கிவிட்டேன். மீண்டும் நடிக்க வேண்டும் என சொன்னபோது என் குடும்பத்தினர் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களை கன்வின்ஸ் செய்து சம்மதிக்க வைத்தேன்.

விஜய்யிடம் இந்த அஷ்டகர்மா’ கதையைக் கேட்டேன். எனக்கு பிடித்திருந்தது. அவரும் புதுசு.. நானும் புதுசு.. இது செட்டாகுமா என்ற தயக்கமும் இருந்தது. பைலட் பிலிம் எடுத்து பார்த்தேன். நன்றாக இருந்தது. அப்பா, “அநாவசிய செலவு செய்யாதே.. தேவைக்கான செலவுகளை மட்டும் செய். அப்போதுதான் ஜெயிக்க முடியும்…” என்றார். அது என் மனதில் பதிந்துவிட்டது.  அதை இந்தப் படத்தில் பாலோ செய்திருக்கிறேன். அப்பாவின் ஆசிர்வாதம் எனக்கும் இருக்கிறது என நம்புகிறேன்.

ஒரு நல்ல டீம் கிடைத்தது நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் ஒரு பாடல்தான். அதையும் டி ராஜேந்தரே எழுதி, பாடி விட்டார். அதற்கு நன்றி.  இந்தப் படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகிறது. உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.

Our Score