தமிழகத்தில் தற்போதைய கொரோனாவின் இரண்டாம் அலை காலக்கட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. தயாரித்து முடித்து, வெளியாகாத தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டிவிட்டது.
ஆனால் ஓடிடி தளங்கள் தாங்களாகவே புதிய திரைப்படங்களைத் தயாரிக்கத் துவங்கிவிட்டன. அவற்றைத் தியேட்டருக்கு கொண்டு வராமல் தங்களுடைய ஓடிடி தளத்திலேயே வெளியிடுகின்றன.
இந்த வரிசையில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘மலேஷியா டூ அம்னீஷியா’.
இந்தப் படத்தை மங்கி மேன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

மேலும் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – பிரேம்ஜி, கலை – கதிர், எழுத்து,
முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குநரான ராதா மோகன் இயக்கியுள்ளார்.
‘லாக்கப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜீ-5 தளம் தயாரித்துள்ள அடுத்த படம் இதுதான்.
இத்திரைப்படம் வரும் மே-28-ம் தேதியன்று ZEE-5 தளத்தில் வெளியாகிறது.









