நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் 25-வது படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை Benchmark Films சார்பில் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் ஜோதி முருகன் மற்றும் சீனிவாசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘கார்பன்’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.
இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, ‘மூணார்’ ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், பிச்சைக்காரன் மூர்த்தி, டவுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விவேக் ஆனந்த், கலை இயக்கம் – ஜெயச்சந்திரன் B.F.A., படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – சாம்.சி.எஸ்., சண்டை இயக்கம் – கனல் கண்ணன், எழுத்து, இயக்கம் – சீனிவாசன்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் சீனிவாசன் பேசும்போது, “ஒரு புதுமையான களத்தில் வித்தியாசமான திரில்லர் டைப்பில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை 6 இரவுகள் மற்றும் 7 பகல் பொழுதுகளில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் குப்பை தொட்டி, குப்பை பொருட்கள், குப்பை லாரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
படத்தில் விதார்த் ஏற்றிருக்கும் கதாப்பாத்திரம், கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப் பிசகாமல் அடி பேப்பரில் பதிவது போல் இந்த சம்பவம் நடைபெறுவதால்… படத்திற்கு ‘கார்பன்’ தலைப்பு பொருத்தமாக இருக்குமென்பதால் இத்தலைப்பே வைக்கப்பட்டுள்ளது..” என்றார்.
படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது. பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளது.









