full screen background image

“கமல்ஹாசனின் கட்சி மார்க்கெட்டிங் தந்திரம் செய்கிறது…” – நடிகை கவுதமியின் கருத்து

“கமல்ஹாசனின் கட்சி மார்க்கெட்டிங் தந்திரம் செய்கிறது…” – நடிகை கவுதமியின் கருத்து

“நடிகர் கமல்ஹாசனின் கட்சியான ‘மக்கள் நீதி மையம்’ வாக்குகளைப் பெறுவதற்காக மார்க்கெட்டிங் தந்திரம் செய்து வருவதாக” நடிகை கவுதமி கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் பத்திரிகையாளர்களிடத்தில் இது பற்றிப் பேசும்போது, “நான் கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது. அது முடிந்து போன பிரச்சினை. மக்கள் நீதி மையம் “மாற்றத்தைக் கொண்டு வருவோம்…” என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா என்பதை முதலில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் புதிய கட்சியைத் தொடங்கும்போது “மாற்றங்களைக் கொண்டு வருவோம்” என்று சொல்வது வழக்கமான ஒன்றுதான். அதே மார்க்கெட்டிங் தந்திரத்தைதான் கமலின் மக்கள் நீதி மய்யமும்’ கடைப்பிடித்து வருகிறது. ‘மக்கள் நீதி மய்ய’த்தின் வெற்றி குறித்து மே 2-ம் தேதிக்கு பிறகுதான் தெரியவரும்…” என்றார் நடிகை கவுதமி.

Our Score