‘பபூன்’ படத்தில் நாடக பபூனாக நடிக்கும் வைபவ்

‘பபூன்’ படத்தில் நாடக பபூனாக நடிக்கும் வைபவ்

‛ஜெகமே தந்திரம்’ படத்தை முடித்துவிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்து விக்ரம், மற்றும் அவரது மகன் துருவ்வை வைத்து விக்ரமின் 60-வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நேரத்தில் தனது ஸ்டோன் பென்ச் மூலம் பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் கார்த்திக் சுப்பராஜ், இப்போது தனது 5-வது தயாரிப்பாக ‛பபூன்’ என்ற படத்தை எடுக்கிறார்.

இந்தப் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநரான அசோக் வீரப்பன் இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த பபூன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில் நாடகத்தில் நடிக்கும் ‘பபூன்’ தோற்றத்தில் இருக்கிறார் வைபவ்.

Our Score