full screen background image

சினிமா கலைஞர்களின் வலிகளை சொல்ல வரும் ‘ரீல் அந்து போச்சு’ திரைப்படம்!

சினிமா கலைஞர்களின் வலிகளை சொல்ல வரும் ‘ரீல் அந்து போச்சு’ திரைப்படம்!

காலிடஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வி.கே.மதன் மற்றும் குர்ரம் கௌதம் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரீல் அந்து போச்சு’.

இப்படத்தின் கதாநாயகனாக ஆதித் அருண் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘24 KISSES’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மக்கள் தொடர்பு – குணா, இசை – நந்தா, ஒளிப்பதிவு – ஓமர், படத் தொகுப்பு – பாஸ்கர் சுப்ரமணியன், கலை இயக்கம் – தேவா, உடைகள் – வளையாபதி, சண்டை இயக்கம் – பயர் கார்த்திக், நடன இயக்கம் – சிவ் ராக் சங்கர், ரமேஷ், ரமேஷ் கமல், விளம்பர வடிவமைப்பு – ஜாக்சன், தயாரிப்பு நிர்வாகம் – பி.ராஜ்குமார், நிர்வாகத் தயாரிப்பு விஜி ஆண்டனி, தயாரிப்பாளர் – வி.கே.மதன், குர்ரம் கெளதம் குமார், எழுத்து, இயக்கம் – நூர்தின்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று காலையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்தப் படத்தின் துவக்க விழாவில் நடிகர் ஆதித் அருண் பேசும்போது, “இந்தப் படம் எனக்கு தமிழில் ஒரு மறு அறிமுகம் மாதிரிதான். ‘இனிது இனிது’, ‘தங்க மகன்’ படங்களுக்குப் பிறகு தமிழில் இப்போதுதான் நடிக்கிறேன். இந்தப் படம் நிச்சயமாக ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும்.

முழுக்க, முழுக்க காமெடி கலாட்டாக்கள்  நிறைந்ததாக இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நூர்தீன். சினிமா தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட படம் இது. அவர்களது வலிகளை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இந்த ‘ரீல் அந்து போச்சு’ படம் இருக்கும்..” என்றார்.

இந்நிகழ்வில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.

Our Score