ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் V.G.ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பூபதி ராஜா இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘அசால்ட் & ஃபால்ட்’.
‘மத்திய சென்னை’, ‘காட்டுப் பய சார் இந்த காளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்கொண்ட நடிகர் ஜெய்வந்த், இப்படத்தை தயாரித்து, இதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் ஜெய்வந்துடன் முக்கிய வேடங்களில் சரவணன், சென்ட்ராயன், ராமர், கோதண்டம் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், இவர்களுடன் சோனா, ரிஷா, தேவி, நாகு, சதீஷ் பாபு, ஞானம் ஜிந்தால், கோபி மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் – ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ், ஃப்ரீ காஸ்ட் ஆப் புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர்கள் – V.G.ஜெய்வந்த், பூபதி ராஜா, இயக்கம் – பூபதி ராஜா, ஒளிப்பதிவு – ராஜேஷ் குமார் N.S., படத்தொகுப்பு – S.P.ராஜா சேதுபதி & R.சத்தியமூர்த்தி, கலை இயக்கம் – அருண் கல்லுமூடு, இசை – ‘V2’ புகழ் விஜய் & விக்கி, பாடல்கள் – மெட்ராஸ் மீரான், துப்பாக்கிஸ் மற்றும் பூபதி, சண்டை இயக்கம் – டான் அஷோக், நடன இயக்கம் – பூபதி, வி.எஃப்.எக்ஸ். – ஆகாஷ் ஆசோம், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
ஒரே படத்தில் இரு வேறு கதைகளைக் கொண்டதாக வித்தியாசமான பாணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
‘அசால்ட்’ என்னும் கதை ஒரு சாமானியன் விதிவசத்தால் ஒரு ரவுடியை எதிர்க்க நேருகின்ற கதையை சொல்கிறது. அதேபோல் ‘ஃபால்ட்’ என்னும் கதை முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கதையை ‘அசால்ட்’ கதையின் மேக்கிங் காட்சிகளில் இருந்தே நமக்கு சொல்கிறது.
தற்போது இந்த ‘அசால்ட் & ஃபால்ட்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்தப் படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ்த் திரையுலகின் மூத்தத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.