‘Cameo Films’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான C.J.ஜெயக்குமார் தயாரித்து வரும் திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்’.
இந்தப் படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதியின் இசையில், R.D. ராஜசேகரின் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசனின் படத் தொகுப்பில் உருவாகி வரும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
தற்போது இந்தப் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக, ஒரு கவுரவ தோற்ற கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி – நயன்தாரா ஜோடி ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் மிகப் பெரிய ஹிட் ஜோடியானது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடியின் மேஜிக் இப்படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்காக விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை நேற்று தொடங்கவுள்ளார்.
விஜய் சேதுபதியின் நுழைவினால் 2018-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் மாறியுள்ளது. இந்தப் படம் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகவுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளது.









