80-களின் நட்சத்திரங்கள் தாங்கள் மட்டுமே தங்களுடைய மலரும் நினைவுகளைக் கொண்டாடும் விழாவை கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். முதல் 2 வருடங்களை சென்னையில் கொண்டாடினார்கள். அப்போது லிஸியின் வீட்டில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்புக்குள்ளாகியது.. 3-வது வருடம் ஹைதராபாத்தில் சிரஞ்சீவியின் வீட்டில்.. 4-வது வருடம் பெங்களூரில் அம்பரீஷ் வீட்டில்.. இதன் தொடர்ச்சியாக 5-வது வருட விழாவை சமீபத்தில் ஜனவரி 18-ம் தேதியன்று மோகன்லாலின் சென்னை ஈஞ்சம்பாக்கம் பண்ணை வீட்டில் நடத்தியிருக்கிறார்கள்..!
தமிழில் இருந்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு, சுமன், மோகன், பானுசந்தர், ரேவதி, பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மணிரத்னம், நதியா, ராதா, அம்பிகா, குஷ்பூ, ராதிகா, ரம்யா கிருஷ்ணன், ஜெயஸ்ரீ, சரிதா, ஷோபனா, தெலுங்குலகில் இருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ், மலையாள உலகிலிருந்து ஜெயராம், மோகன்லால், லிஸி, மேனகா, கன்னடவுலகில் இருந்து அம்பரீஷ், சுமலதா, ரமேஷ் அரவிந்த் என்று மொத்தம் 32 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
மோகன்லாலின் 45 நிமிட மேஜிக்குதான் அனைவரையும் அசர வைத்துவிட்டதாம்.. இந்த நிகழ்ச்சிக்கான டைம்டேபிளை சுஹாசினியும், சரிதாவும் மேற்கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் டிரெஸ் கோடிங் முதற்கொண்டு சாப்பாட்டு வகைகள்கூட வித்தியாசமாகவே இருந்திருக்கிறது.. நண்டும், லாப்ஸ்டரும் அந்தமானில் இருந்து கொண்டு வரப்பட்டதாம்..! ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக தங்களது மலரும் நினைவுகளை அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள் நமது நேற்றைய நாயகர்களும், நாயகிகளும்..! வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் அவரவர் ஓவியங்களை வரைந்து சஸ்பென்ஸாக பரிசளித்திருக்கிறார் மோகன்லால்..!
அடுத்த வருடம் யாரோட ட்ரீட் என்பதை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் இவர்கள்.. கமலையும், நாகார்ஜூனாவையும் அடுத்த வருஷம் எப்படியும் இழுத்திட்டு வந்திருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். 4 வருஷமா வராத கமலா, இனிமேல் வரப் போறார்..?









