2018-ம் ஆண்டின் உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

2018-ம் ஆண்டின் உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

வருடா வருடம் போலவே இந்தாண்டும் தமிழ்த் திரையுலகின் சிறந்த சாதனையாளர்களை பட்டியலிடுவது மிகச் சிரமமாகத்தான் இருந்தது.

பல புதுமுக இயக்குநர்கள் தங்களது சிறப்பான இயக்கத் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

பல புதிய சின்ன பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்து விருதுகளும் தங்களுக்கே கொடுத்தாக வேண்டும் என்று மிரட்டுவதை போல வெளிவந்திருக்கின்றன.

திரையுலகில் அனுபவம் வாய்ந்த பல கலைஞர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

இத்தனை சிரமத்தில் சிறந்த கலைஞர்களையும், திரைப்படங்களையும் தேர்வு செய்வது மிகக் கடினமாக இருந்தது. பல்வேறு விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, நடுநிலைமை தவறாமல், யார், எவர் என்றெல்லாம் யோசிக்காமல் 2018-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களும் தேர்வு செய்திருக்கிறோம்..!

இதில் விடுபட்டுப் போன நல்ல, திறமையான கலைஞர்களும், படங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மயிரிழையில் மில்லி செகண்ட் இடைவெளியில் அவைகள் விடுபட்டிருக்கின்றன. அந்தப் படைப்பாளிகளும், கலைஞர்களும் அடுத்தடுத்து இதைவிடவும் மிகச் சிறந்த படைப்புகளை படைத்து தங்களை நிரூபிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்..!

வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது இணையத்தளத்தின் வாசகர்கள் சார்பாகவும், தமிழ்ச் சினிமாவின் தீவிர ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! 

2018-ம் ஆண்டின் ‘உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்’ பட்டியல் :

1.சிறந்த திரைப்படம் – முதல் பரிசு – மேற்குத் தொடர்ச்சி மலை

2. சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு – பரியேறும் பெருமாள்

3. சிறந்த திரைப்படம் – மூன்றாம் பரிசு – கனா

4. சிறந்த நகைச்சுவை திரைப்படம் – காசு மேல காசு

5. சிறந்த பேய் படம் – மெர்க்குரி

6. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – 96

7. சிறந்த இயக்குநர் – லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை)

8. சிறந்த இயக்குநர் – சிறப்பு விருது – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)

9. சிறந்த புதுமுக இயக்குநர் – பிரேம்குமார் – (96)

10. சிறந்த புதுமுக இயக்குநர் – சிறப்பு விருது – ஜி.ஆர்.ஆதித்யா (சவரக்கத்தி)

11. சிறந்த கதை – லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை)

12. சிறந்த கதை – சிறப்பு விருது – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)

13. சிறந்த திரைக்கதை – லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை)

14. சிறந்த திரைக்கதை – சிறப்பு விருது –  மிஷ்கின் – (சவரக்கத்தி)

15. சிறந்த வசனம் – மாரி செல்வராஜ் – (பரியேறும் பெருமாள்)

16. சிறந்த வசனம் – சிறப்பு விருது – அருண்ராஜா காமராஜ் – (கனா)

17. சிறந்த நடிகர் – ராம் – (சவரக்கத்தி) 

18. சிறந்த நடிகர் – சிறப்பு விருது – கதிர் (பரியேறும் பெருமாள்)

19. சிறந்த புதுமுக நடிகர் – ஆண்டனி (மேற்குத் தொடர்ச்சி மலை)

20. சிறந்த புதுமுக நடிகர் – சிறப்பு விருது – தினேஷ் (ஒரு குப்பைக் கதை)

21. சிறந்த புதுமுக நடிகை – கெளரி ஜி.கிஷன் (96)

22. சிறந்த புதுமுக நடிகை – சிறப்பு விருது – இவானா (நாச்சியார்)

23. சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் – (கனா)

24. சிறந்த நடிகை – சிறப்பு விருது – பூர்ணா (சவரக்கத்தி)

25. சிறந்த துணை நடிகர் – பிரகாஷ்ராஜ் (60 வயது மாநிறம்)

26. சிறந்த துணை நடிகர் – சிறப்பு விருது – சுனில் கே.ஷெட்டி (சீதக்காதி)

27. சிறந்த துணை நடிகை – ஆண்ட்ரியா (வட சென்னை)

28. சிறந்த துணை நடிகை – சிறப்பு விருது – ஆதிரா (வட சென்னை, திமிரு புடிச்சவன்)

29. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – வனகாளி (மேற்குத் தொடர்ச்சி மலை)

30. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது – எம்.எஸ்.பாஸ்கர் (காற்றின் மொழி, துப்பாக்கி முனை)

31. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – ரமா (கனா)

32. சிறந்த குணச்சித்திர நடிகை சிறப்பு விருது – ஈஸ்வரி ராவ் (காலா)

33. சிறந்த வில்லன் நடிகர் – மிஷ்கின் (சவரக்கத்தி)

34. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருது – அனுராக் காஷ்யப் (இமைக்கா நொடிகள்)

35. சிறந்த வில்லி – வரலட்சுமி சரத்குமார் (சண்டக்கோழி-2)

36. சிறந்த வில்லி – சிறப்பு விருது – சிம்ரன் (சீமராஜா)

37. சிறந்த நகைச்சுவை நடிகர் – மயில்சாமி (காசு மேல காசு)

38. சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு விருது – தம்பி ராமையா (பில்லா பாண்டி)

39. சிறந்த நகைச்சுவை நடிகை – மதுமிதா (காசு மேல காசு)

40. சிறந்த நகைச்சுவை நடிகை சிறப்பு விருது – கோவை சரளா (காசு மேல காசு)

41. சிறந்த குழந்தை நட்சத்திரம் – தித்யா (லட்சுமி)

42. சிறந்த குழந்தை நட்சத்திரம் – சிறப்பு விருது – ஷாலு (இமைக்கா நொடிகள்)

43. சிறந்த ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர் (மேற்குத் தொடர்ச்சி மலை)

44. சிறந்த படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன் (மெர்க்குரி)

45. சிறந்த ஒலிப்பதிவு – ரசூல் பூக்குட்டி (2.0)

46. சிறந்த ஒலிக்கலவை – ரசூல் பூக்குட்டி (2.0)

47. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – Quantum FX (2.0)

48. சிறந்த நடன இயக்கம் – பிரபுதேவா (லஷ்மி, மாரி-2)

49. சிறந்த சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன் (இரும்புத்திரை)

50. சிறந்த கலை இயக்கம் – முத்துராஜ் (2.0)

51. சிறந்த ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி (காற்றின் மொழி)

52. சிறந்த ஒப்பனையாளர் – பானு (2.0)

53. சிறந்த பின்னணி இசை – சந்தோஷ் நாராயணன் (மெர்க்குரி)

54. சிறந்த பாடல் இசையமைப்பாளர் – பரணி (ஒண்டிக்கட்ட)

55. சிறந்த பாடலாசிரியர் – கவிஞர் வைரமுத்து (‘என்னைப் பெத்தத் தாயே’ – பிரான்மலை)

56. சிறந்த டூயட் பாடல் – கெட்டக் கெட்டக் கனவா வருது (ஒண்டிக்கட்ட)

57. சிறந்த ஜனரஞ்சக பாடல் – அடி பப்பாளி பழமே – (மணியார் குடும்பம்)

58. சிறந்த சோகப் பாடல் – என்னைப் பெத்தத் தாயே (பிரான்மலை)

59. சிறந்த பின்னணி பாடகர் – வேல்முருகன் (‘சண்டாளி’ – பாடல் – ‘செம’ – திரைப்படம்)

60. சிறந்த பின்னணி பாடகி – வைக்கம் விஜயலட்சுமி (‘வாயாடி பெத்த புள்ள’ – ‘கனா’)

61. சிறந்த டிரெய்லர் – செக்கச் சிவந்த வானம்

தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

Our Score