full screen background image

அகில் – கல்யாணி நடித்திருக்கும் ‘ஹலோ’ பிப்ரவரி-8-ம் தேதி வெளியாகிறது

அகில் – கல்யாணி நடித்திருக்கும் ‘ஹலோ’ பிப்ரவரி-8-ம் தேதி வெளியாகிறது

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனா – அமலா தம்பதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த ‘ஹலோ’ என்ற திரைப்படம், இப்போது அதே பெயரில் தமிழிலும் வெளியாகவுள்ளது.

மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, சூர்யா நடித்த ‘24’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜெகபதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ் குருவில்லா, வெண்ணிலா கிஷோர்  ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  – P.S.வினோத், இசை – அனூப் ரூபன்ஸ், படத் தொகுப்பு – பிரவீன் புடி, தயாரிப்பு  –  நாகர்ஜுனா, கதை, திரைக்கதை, இயக்கம் – விக்ரம்.K.குமார்.

ரொமாண்டிக் ஆக்ஷன், திரில்லர் கலந்த பக்கா கமர்ஷியல் திரைப்படமாக இது உருவாகியிருக்கிறது. இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமாக படம் பிடிக்கப்பட்டுள்ள சண்டை காட்சிகளில் தாய்லாந்து  நாட்டு சண்டை கலைஞர்களும் இணைந்து  பணியாற்றி உள்ளனர். படத்தில் ஐந்து பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது.

இந்தப் படத்தை ஸ்ரீலஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் A.N.பாலாஜி உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 8-ம்  தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Our Score