ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..!

ஜீ தமிழ் சேனல் வழங்கிய 2019-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஜய் சேதுபதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் சமந்தா, நயன்தாரா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் யோகிபாபு, நடிகர் நவாஸுதின் சித்திக், நடிகை ரம்யா கிருஷ்ணன், சஞ்சிதா ஷெட்டி, சாயிஷா, பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம், பாடகி ஷ்ரேயா கோஷல், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகை ரித்திகா சிங், நடிகர் பார்த்திபன், நடிகை ஷெரின், நடிகர் தர்ஷன், நடிகை சாக்சி அகர்வால், நடிகை ஸ்ருதி கமல்ஹாசன், இசையமைப்பாளர் டி.இமான், நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர், குழந்தை நட்சத்திரம் அஸ்வத், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் குழுவில் நடிகை சுஹாசினி, நடிகரும், இயக்குநருமான கரு.பழனியப்பன், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் பரத்பாலா, பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மொத்தம் 25 பிரிவுகளில் விருதுகளுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பல முக்கிய விருதுகளுக்கு இணையம் மூலமாக ரசிகர்களே வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு அதன்படியே இணையத் தேர்தலும் நடைபெற்றது. 14 பிரிவுகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இணையத் தேர்தல் நடைபெற்றது.

இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர்களான தீபக்கும், அர்ச்சனாவும் தொகுத்து வழங்கினார்கள்.

இந்த விழாவில் விருது பெற்ற கலைஞர்களின் விபரம் :

சிறந்த திரைப்படம் – பேரன்பு

சிறந்த கதை – ராம் (பேரன்பு)

சிறந்த திரைக்கதை – ராதாகிருஷ்ணன் பார்த்திபன் (ஒத்த செருப்பு)

சிறந்த இயக்குநர் – வெற்றிமாறன் (அசுரன்)

சிறந்த அறிமுக இயக்குநர் – அருண்ராஜா காமராஜ் (கனா)

சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)

சிறந்த அறிமுக நடிகர் – துருவ் விக்ரம் (ஆதித்ய வர்மா)

சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)

சிறந்த அறிமுக நடிகை லிஜோ மோள் ஜோஸ் (சிவப்பு மஞ்சள் பச்சை)

சிறந்த நடிகை – மக்கள் விருது – நடிகை நயன்தாரா – (விஸ்வாசம், பிகில்)

சிறந்த நடிகை – நடுவர்களின் சிறப்பு விருது – சமந்தா அக்கினேனி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த துணை நடிகர் – ஜார்ஜ் (கைதி)

சிறந்த துணை நடிகை – அஞ்சலி(பேரன்பு)

சிறந்த நகைச்சுவை நடிகர் – யோகிபாபு (கோமாளி)

சிறந்த வில்லன் – அர்ஜூன் தாஸ் (கைதி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – சாதனா (பேரன்பு)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – அஸ்வந்த் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த அறிமுகம் – கென் கருணாஸ் (அசுரன்)

சிறந்த ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன் (கைதி)

சிறந்த படத் தொகுப்பு – சத்யராஜ் நடராஜன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த நடன இயக்குநர் – பிரபுதேவா (ரவுடி பேபி-மாரி-2)

சிறந்த சண்டை இயக்குநர் – அன்பறிவ் (கைதி)

சிறந்த ஒப்பனை – பானு (பேட்ட)

சிறந்த உடை அலங்காரம் – பெருமாள் செல்வம் (அசுரன்)

சிறந்த பாடல் இசையமைப்பாளர் – அனிருத் (பேட்ட)

சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ்குமார் (அசுரன்)

சிறந்த பாடலாசிரியர் – தாமரை (கண்ணான கண்ணே – விஸ்வாசம்)

சிறந்த பின்னணிப் பாடகர் – சித் ராம் (கண்ணான கண்ணே – விஸ்வாசம்)

சிறந்த பின்னணிப் பாடகி – ஷ்ரேயா கோஷல் (அன்பே பேரன்பே – என்.ஜி.கே.)

இது மட்டுமில்லாமல்…

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பெயரிலான ‘சாதனையாளர் விருது’ இயக்குநர் ஷங்கருக்கு வழங்கப்பட்டது.

இந்திய இசைத் துறையில் பெருமைக்குரியவர் விருது ‘ஆஸ்கர் நாயகன்’-‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவியின் பெயரிலான ‘சாதனையாளர் விருது’ நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

‘இந்திய சினிமாவின் பெருமைக்குரியவர்’ என்னும் விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

‘தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனதில் நிற்கும் நடிகர்’ என்னும் விருதினை அஜீத் பெற்றார்.

‘சிறந்த சமூகப் பொறுப்புணர்வுள்ள நடிகர்’ என்னும் விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

மேலும், இதே மேடையில் ஜீ குழுமத்தின் சார்பில் புதிதாகத் தமிழ் மொழியில் துவக்கப்பட்டிருக்கும் “ஜீ திரை” என்னும் புதிய சேனலும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இந்த சேனலை உலக நாயகன் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

Our Score