full screen background image

காபி வித் காதல் : வைரலாகும் யுவனின் ‘பேபி கேர்ள்’ வீடியோ ஆல்பம்

காபி வித் காதல் : வைரலாகும் யுவனின் ‘பேபி கேர்ள்’ வீடியோ ஆல்பம்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’.

இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

எழுத்து ,இயக்கம் – சுந்தர்.சி, தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட், மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர்.C, A.C.S.அருண் குமார், இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு – ஃபென்னி ஆலிவர், கலை இயக்கம் – குருராஜ்.B, நடன  இயக்கம் – ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி, தீனா, சண்டை பயிற்சி இயக்கம் – தளபதி தினேஷ், நிர்வாக தயாரிப்பு- பாலா கோபி, பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.

கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ‘ரம்பம்பம் ஆரம்பம்’ என்கிற ரீமிக்ஸ் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக ‘பேபி கேர்ள்’ என்கிற இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது.

நாயகன் நாயகி இருவருக்கும் இடையேயான நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அந்த தருணத்தில் அந்த புதிய அன்பு கிடைப்பதன் மூலம் நாயகன் இதயத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அதன் பின்னர் அவன் பார்க்கும் பார்வையில் இதுவரை அவன் பார்த்த உலகம் எல்லாமே, தற்போது புதிதாக வித்தியாசமாக தெரிகிறது.

இந்த சூழலை மையப்படுத்தி

“என்ன இது

புதிதாய் புதிதாய் புதிதாய்

எனக்குள் ஏதேதோ

புதிராய் புதிராய்

இரண்டாம் மூச்சுக் காற்று

உள்ளே அடிக்குதே”

என நாயகன் பாடுவது போல இந்த பாடல் உருவாகி உள்ளது.

பா.விஜய் எழுதியுள்ள இந்தப் பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் அதேசமயம் இதே பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி, ஒரு சிறப்பு வீடியோ ஆல்பமாக தற்போது யூட்யூப் தளத்தில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் பாடலில் இடையே இடம் பெறும் ராப் பாடல் வரிகளை அசல் கோலார் என்பவர் பாடியுள்ளார். U1 ரெக்கார்ட்ஸ் சார்பாக இந்தப் பாடலை கே.குமரகுருபரன் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

Our Score