இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்சங்கர்ராஜாவின் திருமணம் நேற்று இரவு ராமநாதபுரம் பக்கத்தில் இருக்கும் கீழக்கரையில் நடந்தது.
ஏற்கெனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்ட யுவன்சங்கர்ராஜா, துபாயில் வசிக்கும் கீழக்கரையை சேர்ந்த சப்ரூன் என்கிற பெண்ணை காதலித்திருக்கிறார். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார் யுவன். அப்துல் ஹாலிக் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டாராம்.
அடுத்து வரக் கூடிய திரைப்படங்களில் தனது பெயரை அப்துல் ஹாலிக் எ்ன்றே குறிப்பிடும்படி தான் இப்போது பணியாற்றும் படங்களின் இயக்குநர்களிடம் யுவன் கேட்டுக் கொண்டிருப்பதாகச் செய்தி.
யுவனின் நேற்றைய திடீர் திருமணத்தில் இளையராஜாவின் குடும்பத்தினர் சார்பில் பவதாரிணியும், அவரது கணவரும் மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிகிறது..!









